பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gR.tyrr. 65

இவ்வாறு பெரியோர் பலரால் பாராட்டப்பெறும் மாணிக்கவாசகர் இறைவன் ஒருவனே என்று உளமார எண்ணியவர். அவ்விறைவன் சிவபெருமானே என்று தெளிந்தவர். அச் சிவனார் ஒரு நாமம், ஒர் உருவம் ஒன்றும் இல்லாதவர் என்று எண்ணியவர். அப்படிப்பட்ட தன்மை வாய்ந்த இறைவனை ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேனம் கொட்ட எண்ணி அனைவரையும் அழைத்தவர். 'அருவாய் உருவமுமாய் ஆயபிரான்’ என்றும் எண்ணி எண்ணி நைந்தவர் அவ்விறைவனை ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி என்றும்’ 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் என்றும், பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியன்’ என்றும் பாடிக் களிக்கின்றார். ஞானக்கரும் பின் சாறாகவும், வெல்லப் பாகாகவும், நாடற்கரிய நலமாகவும், நந்தாத தேனாகவும், பழச்சுவையாகவும், சிந்தம் புகுந்து தித்திக்க வல்ல கோனாகவும், பிறப்பு அறுத்து ஆட்கொண்ட கூத்தனாகவும் எல்லாம் வல்ல இறைவனை உள்ளம் மகிழ்ச்சியில் அள்ளுறித் ததும்ப நினைக்கின்றார்.

'நமச்சிவாய' என்ற இறைவனின் தாரக மந்திரத்தை அறிந்து தம் நூலின் முதற் பகுதியாம் சிவபுராணத்தை 'நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க" என்று தொடங்குகின்றார். அவ்விறைவனை "இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்று பரவிப் போற்றுகின்றார். இறைவன் பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்’ என்றும், 'ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன்’ என்றும், தாயிற் சிறந்த தயாவான தத்துவன்’ என்றும், போது நின்ற பெருங்கருனைப் பேராறு’ என்றும், 'நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன்' என்றும்,