பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சமயந்தொறும் நின்ற தையலாள்

"தில்லையுட் கூத்தன்' என்றும், தென்பாண்டி நாட்டான்' என்றும், அல்லற் பிறவி யறுக்கும் சொல்லற்கரியான்' என்றும் அகங்குழைந்து நெக்குருகித் துதிக்கின்றார்.

மாணிக்கவாசகர் அன்பு வேறு; ஆண்டவன் வேறு என்று எண்ணியவர் அல்லர். இறைவன் அருளே இடையறாத இன்பத்தைத் தருவது எனக் கருதியவர். ஆதலால் இறைவனைத் தலைவனாகவும், தன்னைத் தலைவியாகவும் மணிவாசகப் பெருந்தகையார் எண்ணிக் கொண்டு பல பாடல்களைப் பாடியுள்ளார். நானுறு கட்டளைக் கலித்துறையான் இயன்ற திருக்கோவையார் இம்முறையில் அமைந்ததாகும். மேலும், நாயகன் நாயகி பாவத்தில் திரு அம்மானைப் பாடல்கள் துலக்கமுறக் காணலாம். அப்பாட்டில் மாணிக்கவாசகர் தம்மைத் தலைவியாக எண்ணி இறைவனைத் தலைவனாக எண்ணி உளம் உருகிப் பாடியுள்ளார் :

"அழகிய கொன்றை மாலையைத் தலையில் அணிவேன். அணிந்து, சிவபெருமானது எழுச்சிமிக்க தோள்களைச் சேர்வேன்; சேர்ந்து, அவனைக் கூடி, அதனாற் பிறந்த களிப்பால் அறிவு மயங்கிப் புலவி யெய்துவேன். பின்னர், புலவி நீங்கி, அனனது சிவந்த இதழைப் பெற உளமுருகி நிற்பேன். நெஞ்சம் நிறை யழிந்து நெக்குருக அவனைத் தேடுவேன். தேடி, அவன் திருவடியையே எஞ்ஞான்றும் நினைந்திருப்பேன். அவன் திருவருளைப் பெறாது மெலிவேன். அதனைப் பெற்று மீண்டும் மகிழ்வு கொள்வேன். எனவே நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற கூ த் த னி ன் சி வ ந் த திருவடிகளையே நாம் பாடுவோமாக."