பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. முன்னியது முடிக்கும் முருகன்

பண்டைத் தமிழர் தாம் வாழ்ந்த நாட்டினை

நானிலம் என்று வழங்கினர். மலையும் மலையைச் சார்ந்த இடம் குறிஞ்சி என்றும், காடும் காட்டைச் சார்ந்த இடம் முல்லை என்றும், வயலும் வயலைச்

சார்ந்த இடம் மருதம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த இடம் நெப்தல் என்றும் வழங்கப்பட்டன. மழை வளங் குறைந்து, முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தாம் இருக்க வேண்டிய வளமான நிலைமையில் இருந்து திரிந்த நிலையில் அந்நிலம் பாலை எனக் கூறப்பட்டது. ஒவ்வொரு நிலத்திலும் வாழ்ந்த தமிழ்ப் பெருமக்கள் தாம் வழிபடுங் கடவுளாக ஒவ்வொரு தெய்வத்தைக் கொண்டனர். குறிஞ்சி நிலத்தார் முருகனையும், முல்லை நிலத்தார் மாயோனையும், மருத நிலத்தார் இந்திரனையும், நெய்தல் நிலத்தார் வருணனையும், பாலை நிலத்தார் காளியையும் தாம் வழிபடு கடவுளர் களாகக் கொண்டனர்,

முதன் முதலில் தோற்றங் கொண்ட நிலம் குறிஞ்சி' என்பர். பழந்தமிழ் மக்கள் மலையில் வாழ்ந்து, மலை நிலக் கடவுளாம் முருகனை வழிபட்டு, இயற்கையோடு இயைந்த இன்ப அன்பு வாழ்வு நடத்தினர், மலையில் சலசலத்து ஒடும் அருவி நீரில் குளித்து, காலை ஞாயிற்றின் கதிரொளியில் மூழ்கி, தண்ணிய இனிய

நறுங்காற்றில் படிந்து, கனிமரந் தந்த சுவையுறு கணிகளையுண்டு, மானும் மயிலும் மகிழ்ந்தோடும்ஆடும் ஆட்டத்தினைக் கண்டு. குயில் கூவும்

சப.-1