பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so சமயந்தொறும் நின்ற தையலாள்

இசையினைச் செவிமடுத்து, தன் காதல் மனைவி யொடும், கவிஞர் இளஞ்சிறாரொடும் ஒருவன் வாழும் வாழ்வு பல்லாற்றானும் சிறப்புடைத்தேயாகும் என்பது பொருள்மொழியன்றோ!

'முருகு' எனுஞ் சொல்லிற்குப் பல பொருள் காண்பர் அறிஞர். தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் மணம், இளமை, கடவுட்டன்மை, அழகு முதலியன நிறைந்த தொரு பொருளே முருகு எனக் குறிப்பர். இயற்கை மணமும், மாறா இளமையும், எல்லாப் பெருளையும் கடந்தொளிரும் தன்மையும் அழியா அழகும் இறைவனி டத்தில் இலங்குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற்கிடம் பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை அவ்விறைவனுக்குப் பழந்தமிழ் மக்கள் சூட்டியதன் திறமையை நோக்குழி அவர்களது கூர்த்தமதி புலனாகிறது என்று திரு. வி. க. அவர்கள் மேலும் கூறுவர்.

பழந்தமிழ்ப் பாட்டுக்களின் தொகுதி எட்டுத் தொகையாகும். எட்டுத் தொகை நூல்களுள் புறத்தைப் பற்றிப் பேசும் நூல் புறநானுாறு ஆகும். புறநானூற்றில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பூவை நிலைத் துறையமையப் பாடிய பாடலில், அம் மன்னனை முருகனோடு உவமித்துப் பேசியுள்ளார்.

'முருகொத் தீயே முன்னியது முடித்தலின்'

-புறம் , 56 , 14 இதன் பொருள் கருதியது முடித்தலான் முருகனை ஒப்பை என்பதாகும். இதனால் முருகப்பெருமான் நினைத்ததை மு. டி ப் ப வ ர் என்பது பெறப்படும். பிறிதொரு புறப்பாடலில் முருகப் பெருமான்,