பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சமயந்தொறும் நின்ற தையலாள்

காணமுடியாது என்று கருதுகிறார். இதற்குக் காரணம் பக்தியினுடைய பிழிவாக, அருளின் ஆணிவேராகத் திருவாசகம் விளங்குகிறது.

திருவாசகத்தில் ஒரு வாசகத்தை மட்டும் எடுத்துப் பார்ப்போம். பழந் தமிழர் இயற்கையோடு இணைந்த செந்நெறி வாழ்ந்தவர்கள். மலையை மேகம் தங்கும் இடமாக மேல்நாட்டினர் கூறினர். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த பாரதி தன்னுடைய இனமாக, கூட்டமாகவே மலையைக் கருதினார். ஈராயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த சங்ககாலத் தலைவி புன்னை மரத்தைத் தம் தமக்கையாகக் கருதி வாழ்த்துகிறாள். இடைக்காலத்தில் ஞானசம்பந்தரும் கிளியை அழைத்துச் சிவ சிவ’ என்று கூறவேண்டுமெனப் பேசுகின்றார். நாகணவாய்ப்புள்ளைத் திருமாலுக்குத் துதிசெய்ய வேண்டும் என்று நம்மாழ்வார் பணிக்கின்றார். இத்தகைய ஒர் உயர்நெறி தமிழர் கண்ட செந்நெறியாகும். அந்த வகையில் நாட்டுப் பாடல்களைக் கவியரங்கேற்றிய மணிவாசகப் பெருமான், வண்டை விளித்து, விழுமியகருத் தொன்றை எடுத்து மொழிகின்றார். "ஏ, வண்டே ஒரே ஒரு பூவில் போய்த் தேன் உண்ணாதே! அந்தப் பூவில் சிறிது தேன்தான் உண்ணக் கிடைக்கும். எப்போதும், தேனைச் சொரிந்து கொண்டேயிருக்கின்ற சிவபெருமானிடத்துச் சென்றால் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கலாம். அந்தக் குனிப்புடை யான் கழலில் திளைக்கலாம். எனவே உன்னுடைய லட்சியம் குறிக்கோள் உயர்ந்ததாக இருக்கட்டும், இறைவனுடைய பாதமலரே உன்னுடைய இறுதிக்

குறிக்கோளாக உறுதியாக அமையட்டும்" என்று எடுத்து மொழிகின்றார்.