பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§.tsm. 70

டினை-சிவ வழிபாட்டினை மேற்கொண்டு இருந்தனர் என்றும் அவர்கள் தங்கள் வீட்டிற்குள்ளேயே கரந்துறை &root–4,6067 (Underground drainages) — -9/60logg, வீடுகட்டி வாழ்ந்தனர் என்றும் தெரியவருகிறது. இதனால் பல்லாயிரம் ஆண்டு காவத்திற்கு முற்பட்டதாகச் சைவ சமயத்தின் பழமையினை நாம் கருதலாம்.

சங்க கால இலக்கியங்களில் சிவனாரைப்பற்றிய குறிப்பு தெளிவாக இடம்பெற்றிருப்பதைக் காணலாம் . மலைக் காட்சியினை வருணிக்கின்ற புலனழுக்கற்ற அந்தணரான கபிலர் ஒர் உவமை வாயிலாக சிவனார் இமயமலையில் உமாதேவியோடு வீற்றிருக்கும் காட்சி யினை நம்முன் காட்டுகின்றார். இமய மலையினை வில்லாக வளைத்த இறைவன் அவ் இமயமலையில் தம் மனதிற்கு இயைந்த மனைவியாம் உமாதேவியோடு வீற்றிருந்தபொழுது, அவ்வழியே வந்த ஐபிரு தலைகளும் இருபது தோள்களும் உடைய இராவணன் அம்மலையை எடுக்க முனைந்தபொழுது உமையம்மை நடுங்கி, சிவனைச் சேர்த்துக் கட்டிக்கொள்ள, சிவனார் தம் கால் கட்டை விரலால் அம் மலையினை அழுத்தி இராவணன் மலையின் கீழ்ப் புகுத்திய கைகளை எடுக்கமுடியாமல் வருந்திக் கதறியதாகக் கபிலர் பெருமான் குறிப்பிடுவர். இந்த உவமையினைக் காடு சூழ்ந்த மலைக்காட்சியை வருணிக்கும்பொழுது எடுத்துக் கூறுவர். ஒரு மலைப்பாங் கில் உறங்கிக்கொண்டிருந்த யானை தன்னுடைய கனவில் ஒரு புலியைக் கண்டது. தன்மேல் பாய வருகின்ற புலியினை அடிக்க வேண்டுமென்று கருதி அந்தப் புலியின் மேல் பாய்ந்தது. அவ்யானை பாய்ந்தது கனவில் அன்றோ! ஆதலின், புலி போல் பூக்கள் மலர்ந்து, தோற்றம் கொண்டிருந்த வேங்கை மரத்தைப் புலி எனக் கருதி யானை தன் கொம்புகளைப் புகுத்தியது. அப் பச்சை