பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சமயந்தொறும் நின்ற தையலாள் :

மரத்தில் அதனுடைய கொம்புகள் புகுந்து மீண்டும் வெளியே எடுக்கமுடியாமல் அவ்யானை வருந்தி உழந்தது. இந்த மலைக் காட்சியை விளக்கவேண்டி கபிலர்பெருமான் எடுத்துக்காட்டிய உவமைதான் மேலே நாம் கண்ட சிவன் இராவணன் உள்ளிட்ட கதைக் காட்சியாகும். அப்பாடல் பகுதி வருமாறு :

"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமையமர்ந் துயர்மலை இருந்தன னாக ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை எடுக்கல் செல்லா துழப்பவன் போல......மதயானை கோடுபுய்க் கல்லாது உழைக்கும்' (குறிஞ்சிக்கலி. 2) ஆலமர் கடவுள், ஆலமர் செவ்வன் என்றெல்லாம் சிவன், சங்க நூல்களில் பேசப்பெற்றுள்ளார். மேலும், கங்கையைத் தன் வார்சடையில் கரந்த வரலாற்றினைப் பெரும்பாணாற்றுப்படை பின்வருமாறு பேசும் :

"இமையவர் உறையும் இமையச் செவ்வரை

வெண்திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப் பொன்பொழிந்து இழிதரும் போர்க்கருங் கங்கைப்பெருநீர்" (பெரும்பாண். 430-33) ஐம்பெரும் பூதங்களைப் படைத்து, மொழி முதற் பொருளாய் விளங்கி அலகிலா விளையாட்டு உடையவ னாகச் சிவன் துளங்கும் செம்மையினை மாங்குடி மருதனார்,

"நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்பொடு ஐந்துஉடன் இயற்றிய மழுவாள் நெடியோன் தலைவனாக"

எனக் குறிப்பிட்டுள்ளார்,