பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 85

முதலாம் இராஜராஜன் மகன் முதலாம் இராசேந்திர சோழன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்படுத்திய கோயில் கங்கை கொண்ட சோழனின் கோயில் எனத் துளங்குகின்றது.இவனுடைய மகளார்.அம்மங்கைதேவியின் மகன் முதல் குலோத்துங்கன் ஆவான். அவன் திருநீற்றுச் சோழன் என்றே வழங்கப்பட்டான். முதற் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழன் தில்லை சிற்றம்பலம் வாய்ந்த திருச்சுற்றுவாயில், கோபுர வாயில் இவற்றிற்குப் பொன் வேய்ந்தான். நூற்றுக்கால் மண்டபம் கட்டினான். திருவிக்கிரமன் திருவீதியும் அமைத்தான். இவனுடைய மகன் இரண்டாம் குலோத்துங்கன் தில்லைத் திருப்பணி களை மேலும் விரிவு படுத்தினான். எழுநிலைக் கோபு ரங்களை எடுத்து பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்து சிவகாமி அம்மைக்கு என்று அமைத்த கோயிலைப் பெரி தாக்கினான். திருவாரூர்க் கல்வெட்டு ஒன்று இதனைத் 'தில்லைக் கூத்தபிரான் திருவடித்தாமரையிலுள்ள அரு ளாகிய தேனை உண்ணும் வண்டு போன்றவன்" என்று கூறுகின்றது. காலங்கடந்து நிற்கும் கற்கோயில்களைக் கட்டிய பெருமை தமிழர்களுக்கு உரியது; எனினும் சிறப்பாகத் தஞ்சையை ஆண்ட சோழர்கள் குறிப் பிடத்தக்கவர்கள்."

இரண்டாம் இராஜராஜன் திருமுறைகள் ஒதுவதற்கும் உதவினான். கருவூர்த்தேவர் பாடிய பாடல்கள் திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் பெரியபுராணம் முகிழ்த்தது.

_க_

1. “The Tamil races are the greatest temple builders in the world and great pagoda at Tanjore is by far the greatest temple in India”

8°цр,–6