பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

86 சமயந்தொறும் நின்ற தையலாள்

மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய மெய் கண்டனார் தோன்றினார். மேலும், சோழ மன்னர்கள் தேவாரம் திருக் கோயில்களில் பாடப்படுவதற்கு வழிவகை கண்டனர். சுருங்கச் சொன்னால் சைவத்தின் பொற் காலம் என்று சோழர்கள் காலத்தைச் சொல்லலாம்.

புகழ்பெற்ற இப் பிற்காலச் சோழர்களுக்குப் பின்னர் பிற்காலப் பாண்டியர் ஆட்சியும், நாயக்கர் ஆட்சியும் அதனை அடுத்து ஆங்கிலேயர் ஆட்சியும் தமிழகத்தில் அமைந்தன. சோழர் காலத்தை அடுத்து சைவ சித்தாந்த சாத்திரங்கள் 14 தமிழில் தோன்றின. திருவியலூர் உய்ய வந்ததேவர் இயற்றிய திருவுந்தியாரும் திருக்கடவூர் உய்ய வந்ததேவர் வழங்கிய திருக்களிற்றுப்படியாறும், கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய மெய்கண்ட சாத் திரங்கள் ஆகும். சந்தான குரவருள் முதல்வராகிய மெய் கண்டார் அருளிய சிவஞானபோதமும், அவர் மாணவர் அருணந்திசிவம் அருளிய சிவஞான சித்தியார், ஒருபா ஒருஃபது என்னும் பனுவல்களும், திருவதிகை மனவாசகங் கடந்தார் வழங்கிய உண்மை விளக்கமும் குறிப்பிடத்தக்க சித்தாந்த நூல்கள் ஆகும். திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்ற எட்டு நூல்கள் உமாபதி சிவாசாரியார் இயற்றிய வையாகும்.

'தொன்மையவாம் எனும்எவையும் நன்றாக இன்று தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா'

எனச் சிவப்பிரகாசத்தில் வரும் அடிகள் புதுமைக்கும் இடம் தந்துள்ளதைக் காணலாம். 15-ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் முருக அடியார்களிடத்தில் தனி பக்திச் சிறப்

  • 真* -

---