பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.arp. 91

இறைவனுடைய குணம் ஞானமே என்று பேசியது தத்துவ உலகம். ஆனால் இறைவன் குணமானது தயவின் மூலமாகிய அருளே என்று பேசி, அருள் தன்மை கொண்டு பிற உயிர்களையும் தம்முயிர் போல் வாழ வைக்கும் அருளே இறைவனை அடையும் வழி என்று வாழ்வியலைமக்களின் வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துப் பேசியது சைவ சித்தாந்தம்.

"தயாமூல தன்மமெனும் தத்துவத்தின்

வழிகின்று தாழ்ந்தோர்க்கெல்லாம்" ஒன்று கொடுப்பவனையே அருளாளனாகக் கொண்டு அருளறத்தின் மூலமாக மட்டுமே இறைவனை அடைய முடியும் என்று பேசியது சைவ சித்தாந்தம்.