பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அபிராமி அந்தாதி

சோழ நாட்டில் வற்றாது வளஞ்சுரந்து பாயும் காவிரியின் தென்கரையில் அமைந்திருப்பது திருக்கடவூர். இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இவ்வூரில் இன்றைக்குச் சற்றேறக்குறைய இருநூற்று ஐம்பது ஆண்டு களுக்கு முன்னர் அமிர்தலிங்கம் ஐயரின் மகனாகத் தோன்றியவர் சுப்பிரமணியன் என்பவராவர். வழிவழி யாகத் தேவி உபாசனையும் இசை ஞானமும் வாய்ந்த குடும்பத்தில் ந்ைதவராதலால் இவர் இளமை தொட்டே திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் அபிராமி அம்மையை மிகுந்த நேயத்துடன் வழிபட்டு வருவாராயினார். தமிழ், வடமொழி இரண்டிலும் முற்றிய புலமை நிறைந்த இவர் அபிராமியம்மை மீது ராகமாலிகையில் ஒரு கீர்த்தனம் பாடியுள்ளார். நாளுக்கு நாள் அபிராமியம்மை மீது இவர் முருகிய பேரன்பு செலுத்தத் தொடங்கினார். அபிராமியம்மை மீது இவர் காட்டிய பேரன்பு செலுத்திய பக்தித் திறமும் எளிய உலகோர் புரிந்துகொள்ளும் திறத்ததாக இல்லை. எனவே, மக்கள் இவரை ஒர் அம்பிகைப் பைத்தியம் என்றே கூறி ஒதுக்கிவந்தனர்.

அதுபோது தஞ்சையை ஆண்ட மன்னர் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த சரபோஜி மன்னராவர். அவர் தை அமாவாசையன்று காவிரிப்பூம் பட்டினம் சென்று புகார் முகத்தில் நீராடி மீள்துைவழக்கம். ஒரு முறை அவ்வாறு சென்றபோது புகாரில் நீராடி இடையில் திருக்கடவூரில் அம்பாள் தரிசனத்திற்காக வந்தார்,