பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gă, carr, 9 %

அபிராமி அம்மையின் சந்நிதியில் பித்துற்றார்போல் நின்ற அபிராமி பட்டரைக் கண்டார். அங்குள்ளவர் களிடம் இவர் யார்?' என உசாவினார். அதற்கு அருகிலிருந்தவர்கள் இவர் பித்தர்' எ ன் ற ன ர். மன்னருக்கோ அவர்கள் பேச்சில் நியாயம் இருப்பதாகப் படவில்லை. எனவே ஏதேனும் ஒரு சாக்கில் அபிராமி பட்டரோடு பேச எண்ணங்கொண்டு "இன்று அமாவாசை உண்டா? எவ்வளவு நாழிகை இருக்கிறது" என வினவினார். சந்திரமண்டலத்துச் சந்திரன் போல் அமுத மயமாய் வெள்ளைக் கலை விரித்து விளங்கும் முழுமதி வடிவில் அம்பிகையைத் தம் நெஞ்சில் நிறுத்திடப் பார்த்து அவ்வின் பத்தில் திளைத்துக்கொண்டிருந்த அபிராமி பட்டர், திடீரென்று மன்னர் கேட்ட கேள்வியால் விழிப்புற்று, இன்று பெளர்ணமி என்று சொன்னார். அருகிலிருந்தவர் மகிழ்ந்தனர். தாம் அரசரிடம் கூறிய செய்தி உண்மையேயென்று அவரே நேரிற் கண்டு முடிவிற்கு வந்துவிட்டதாகக் கருதினர். மன்னனும் பட்டரை மதியாமல் அவ்விடத்தைவிட்டு அகன்று விட்டான்.

மன்னன் சென்ற பின்னரே அபிராமிபட்டர் இந்த நிலவுலக எண்ணத்திற்கு மீண்டார். நடந்ததை அறிந்தார்; வருந்தினார். அம்பிகையை எண்ணியே பாடத் தொடங்கினார். சரபோஜி மன்னர் அன்று இரவு துயிலத் தொடங்கியவுடன் அவர் கனவில் வானத்தில் முழுநிலவு உதயமானாற் போலவும், அபிராமியம்மை தன் திருத்தோட்டைக் கழற்றி விசி எறிய அதன் ஒளியில் அவ் அமாவாசையிருட்டிலும் தண்ணிலவு ஒளிபொழிவது போலவும், அபிராமி பட்டர் தம் அருகில் நின்று "அதோ பாருங்கள்; முழுமதி ஒளி வீசுகின்றது" என்ற வானத்தைக்