பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமுதாயப் புரட்சி

அன்புள்ள தலைவர் அவர்களே, தோழர்களே,

இந்த ஆண்டு மேதின விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் கவிஞர் ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா நம் கழகச் சார்பாகக் கூடிய கூட்டத்தில் பேசியதாகும்.

வானமுகட்டிலே, நிலா பட்டொளி வீசிப் பறக்கிறது. நிலா மலர்ந்த இரவிலே நாம் கூடியிருக்கிறோம். இன்று நல்ல நிலவு இருப்பதால்தான் கவிஞர் ஹரீந்திரநாத் அழகாகப் பேசினார். நிலா மலர்ந்த இரவிலேதான் கவிஞர்களுக்கு அழகிய கவிதைகள் தோன்றும். கவிஞர் அழகிய கவிதை ஒன்றை நம் முன்னர் படித்ததைப் பார்த்து நாம் மகிழ்ந்தோம்.

மேலே நல்ல நிலவு; கீழே பார்த்தால் ஒரே இருள். இங்கு மக்கள் குழுமியிருக்கும் மாபெருங் கூட்டத்தின் அளவை தொலை தூரத்தில் இருக்கும் வீதியிலே செல்லும் மோட்டார்கள் உமிழ்கின்ற விளக்கு வெளிச்சத்தின் மூலமாகத்தான் கண்டுபிடிக்க முடியும். அவ்வளவு தூரத்திற்கு மக்கள் இந்த மேதினத்தில் குழுமியிருக்கிறார்கள்.

மேதின சிறப்புகளைப்பற்றியும் உலக நிலைமையைப் பற்றியும் கவி ஹரீந்திரநாத் விளக்கியதோடு நான் ஒரு திராவிடர் அல்ல என்றும் குறிப்பிட்டார். அது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

யார் யார் சனாதனக் கோட்டைககளைத் தகர்த்தெறிய வேண்டுமென்று கருதுகிறார்களோ, யார் யார் மக்கள் உள்ளத்தில் படிந்துள்ள மாசுகளைத் துடைத்துச் சீர்திருத்த