பக்கம்:சமுதாயப் புரட்சி, அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

வேண்டுமென்று எண்ணுகிறார்களோ, யார் யார் மூடப் பழக்க வழக்கங்களை முறியடிக்க வேண்டுமென்று முனைகிறார்களோ அவர்களெல்லாம் திராவிடர்கள். அவர்கள் வங்கத்திலே பிறந்தாலும் சரி, சிந்துவிலே இருந்தாலும் சரி அவர்கள் திராவிடர்கள்தான், திராவிட நாடு பலபேரை சுவீகாரம் எடுத்திருக்கிறது. திராவிட நாட்டுக்கு - ஹரீந்திரநாத் சுவீகாரப் பிள்ளையாகக் கிடைப்பா ரானால் அதை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்போம்.

நம்முடைய தொழிலாளர் நிலையைப் பற்றியும், ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் நண்பர் விளக்கமாக எடுத்துரைத்தார். இன்று சென்னையில் எட்டு இடங்களிலே மே தினக் கொண்டாட்டம் நடக்கிறது. இதே தினத்தில் ஒரு இடத்தில், தோழர் அந்தோணிப்பிள்ளை, மற்றொரு இடத்தில் தோழர் ராஜமன்னார், இன்னொரு இடத்தில் தோழர் ஷெட்டி பேசுகிறார்கள். இப்படிப் பலபேர்கள் பேசும் இந்த நேத்தில் காங்கிரஸ்காரர்கள் மட்டும் பேசாமல் இருப்பார்களா? அவர்களும் இன்று பேசுகிறார்கள். எங்கே? ராஜாஜி மண்டபத்திலே! நமக்கும் அவர்களுக்கும் ஒரு விசேஷம் என்னவென்றால், நாம் திறந்த வெளியிலே பல்லாயிரக்கணக்கில் கூடியுள்ளோம். அவர்கள் மூடிய மண்டபத்திலே, ஆள் நடமாட்டமில்லாத இடத்திலே ஒரு சிறு கூட்டம் கூடியுள்ளார்கள். நரம் சாதாரண மக்கள்; அவர்கள் மாஜி மந்திரிகள், மாஜி மந்திரிகள் மந்திரி சபையில் ஆட்டம் கொடுத்தவர்கள், மந்திரிகளாக விரும்புவோரெல்லாம் அங்குப் பேசுகிறார்கள்.

மேதினத்திற்கு மேதினியின் சரித்திரத்தை அறித்தவர்கள் தேவை; உள்ள உரம் கொண்ட உழைப்பாளிகள் தேவை; அவர்கள். இங்கு ஏராளமாகக் கூடியுள்ளார்கள், மேதினத்திற்கு முக்கியமாக வேண்டியவர்கள் வீரர்கள், நாணயஸ்தர்கள், அவர்கள் இங்கு ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களிடம் எனக்குப் பூரணாம்பிக்கையுண்டு. மேதினத்தில் மேதினியின் சிறப்பைப்பற்றிப் பாடுவதற்குச்