பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முன்னுரை தமிழ்நாடு கலைகளுக்குப் பிறப்பிடம்; கலைகள் தமிழர் வாழ்வை உலகுக்கு உணர்த்துகின்றன. அக் கலைகளே உலகுக்கு வழங்கும் வாளோங்கிய கோபுரங் களும், வற்றாத இயற்கைச் சூழல்களும், பேசும் கற்பாறைகளும், இலக்கியங்களும் இன்றும் நம் முன்னே நலம் பெற்று வாழ்கின்றன. எல்லாக் கலைகளிலும் திட்பமும் செறிவும் செம்மையும் நலமும் செறியத் தமிழர்தம் வாழ்வு நல்ல பண்பட்ட வாழ்வு' என்பதை அவை உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன. இந்த அடிப்படையில் தமிழ்ச்சமுதாயம் தன் பண்டைப் பெருமையோடு புத்தம் புதிய நல்லொளிச் சுடர்களையும் தாங்கி வளர்ந்து வாழ்கின்றது.

   இவ்வாறு நெடுங்காலமாக வரலாற்று எல்லே அறியமுடியாதபடி வளர்ந்து வரும் சமுதாயத்தில் இன்று வாழ்கின்ற மக்கள், பழம் பெருமைகளே மட்டும் பேசிக் காலம் கழித்தால் பயனில்லை. திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்’ என்ற முறைப்படி புத்தம் புதிய உணர்வுக் கலைகளே தோற்றியும் வளர்த்தும் வாழ வைக்க வேண்டியது இன்றைய சமுதாயத்தின் தலையாய கடமையாகின்றது.
   பரந்த பாரதம், உரிமை பெற்றபின் இன்றைய மக்கள் வாழ்வில் செய்யவேண்டிய பல நல்ல செயல் களே வற்புறுத்துகின்றது; கோடிக் கணக்கில் மானிய மாகவும் கடனுகவும் பொருளே வாரி வழங்கி, இன்று நாம் செய்யவேண்டிய நல்ல பணிகளை உணர்த்து கின்றது. நாட்டின் சமுதாய வாழ்வையும், அவ் வாழ்வு பற்றி வளர்ந்தும் அச் சமுதாயத்தைக் காலந் தோறும் தாழாமல் வளர்த்தும் வந்துள்ள பண்பாடு, நாகரிகம், கலை இன்ன பிறவற்றையும் வளர்க்கவேண்டிய தேவை அறிந்து ஒல்லும் வகையில் அரசாங்கம் உதவுகின்றது.