பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 12

 பண்பாட்டுத் துறைக்கெனவே தனி அமைச்சு இயங்குவதறிவோம். அது இந் நாட்டுச் சமுதாயம் கொண்டுள்ள பண்பாட்டினையும், அதன் வழிக் கணக்கிட முடியாத கால எல்லையில் உருவாகிய சமுதாய அமைப்பு முறைகளையும் ஆராய்ந்து, வாழும் மக்கள் முன் வைக்க ஒல்லும் வகையில் முயலுகின்றது. எனினும் சமுதாயம் பற்றியோ அதன் வாழ்வோடு பிணைந்த பண்பாடு பற்றியோ இந்திய மொழியில் சிறந்த நூல்கள் வரவில்லை என்பதை நாடு அறியும். ஒரு சில தலைவர்கள் சமுதாயம், பண்பாடு பற்றி ஆங்கிலத்தில் 

எ ழு தி ய சில நூல்களேயன்றித் தமிழிலோ அன்றி வேறு இந்திய மொழியிலோ நல்ல நூல்கள் இன்றுவரை வெளிவரவில்லை என அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். மேலை நாடுகளில் இதை ஒரு பெரும் பிரிவாகவே கருதி, இந்தச் சமுதாயப் பண்பாட்டு நிலைக்களன்களை ஆராயப் பல்வேறு வகைக் குழுக்களே அமைத்து, அவற்றின் வழி ஆய்வுகள் நடத்தி, அவை பெற்ற முடிவுகளே மீண்டும் மீண்டும் ஆராய்ந்து நல்ல இலக்கியங்களாக நா ட் டு க் கு வடித்துத் தருகிறார்கள். ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்களில் ஒரு பெரும்பகுதி இச்சமுதாய அடிப்படையிலேயே (Sociology) உள்ளமை அறிவோம். நம் நாட்டில் பல கோடி ரூபாய்கள் செலவுசெய்தும் நல்ல நூல்கள் வெளிவராதது எண்ணத்தக்க ஒன்றேயாகும். இந்த உண்மையை எண்ணிய என்னுடைய நல்ல அன்பர் சிலர் இரண்டாண்டுகளுக்கு முன் என்னை இத் துறையில் கருத்திருத்துமாறு கேட்டுக் கெண்டார்கள். எனது பல்வேறு பணிகளுக்கும் சூழல்களுக்குமிடையில் அப்போது நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயங்கினேன். எனினும் அத்துறையில் வெளிவந்துள்ள சில ஆங்கில நூல்களே முறையாகப் படிக்கத் தொடங்கியபோது, இக் கருத்துக் குவியல்கள் பலப்பல நம் தமிழ் இலக்கியத்திலே-இலக்கியக் கடலிலே-முத்து முத்தாக உள்ளனவே என உணர்ந்தேன். சமுதாயத்தையும் பண்பாட்டையும் இணைத்துப் பார்த்தபோது, இரண்