பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 டையும் இணைத்த ஒரு நூல் எழுதலாம் என்ற உணர்வு அப்போது - இரண்டாண்டுகளுக்கு முன் - பிறந்தது. அதற்குப் பிறகே அத்துறையில் வெளிவந்துள்ள பல ஆங்கில நூல்களை ஆழ்ந்து பயின்றேன். அவ்வாறு பயிலுங்கால், அந் நூல்களின் கருத்துக்களும் விளக்கங் களும் காட்டமுடியாத பல உயர்ந்த உண்மைகளையும் செம்பொருள்களையும் நம் பழம்பெரு இலக்கியங்கள் உள்ளடக்கிக் காட்டிய நிலை உணர்ந்தேன். எனவே இந்த உணர்வின் அடிப்படையிலே கடந்த இரண்டாண்டு களில் ஓய்வு கிடைத்த நேரங்களிலெல்லாம் படித்து எழுதி ஓரளவு இன்று இந் நூலை முடித்து மக்கள் முன் வைக்கின்றேன். தமிழில் சமுதாயம் பற்றியோ பண்பாடு பற்றியோ ஆய்ந்த நிலையில் நல்லதொரு நூல் இல்லை. இது எனது முதல் முயற்சி. எனவே இதில் சமுதாயத்தைப் பற்றிய எல்லாக் கருத்துக்களையும் சொல்லி விட்டேனென்றோ பண்பாடு பற்றிய அனைத்தையும் எழுதிவிட்டே னென்றோ -முடிவு கட்ட முடியாது. என்னால் இயன்ற வரையில் பெருங்கடலில் புகுந்து சிறு முத்து ஒன்று எடுப்பதைப் போன்றே இந்த நூலை எழுதியுள்ளேன். இதில் குறைகளிருப்பின், அறிஞர் எடுத்துக் காட்டுவார் களாயின் அவர்கட்கு என்றென்றும் கடமைப்பட்ட வனாவேன். அவர்தம் எடுத்துக்காட்டுகள் அடுத்த பதிப்பிற்குத் துணைசெய்யும் என்ற துணிபுடையேன். சமுதாயமும் பண்பாடும் ஒன்றையொன்று பற்றிப் படர்வன. பண்பாடு எத்தனையோ வகையில் பரந்த உலகில் வாழ் மக்களின் மனம், சூழல், இயற்கை, இன்ன பிறவற்றிற் கேற்ப அமைந்து விரிந்ததாகக் காணப் பெறினும், அனைத்தின் அடிப்படையும் ஒன்றாகவே முடியும் என்பதைக் காட்ட முயன்றிருக் கின்றேன். அப்படியே மக்கட் சமுதாய வாழ்வு தோன்றி வளர்ந்து வளம்பெற்றும் சரிந்தும் நிமிர்ந் தும் காலமெனும் கடும்புனலில் எதிர் நீச்சலிட்டு மெல்ல மெல்ல ஓங்கிவரும் நிலையையும் ஓரளவு