பக்கம்:சமுதாயமும் பண்பாடும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தொகுத்துக் காட்டியுள்ளேன். இரண்டும் ஒன்றை யொன்று தழுவியனவே ஆனமையின், இரண்டைப் பற்றியும் தனித்தனி விளக்கும்போதும், ஒன்றைப் பற்றியே பல்வேறு கோணங்களில் ஆராயும்போதும் ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் திரும்பத் திரும்பக் கையாண்டுள்ளேன். அவை கூறியன கூறல்போல அமையினும், அவ்வவ்விடங்களில் அவ்வெடுத்துக்காட் -டுக்களைத் தவிர வேறு நிறைவு செய்யத்தக்கன இல்லை யென்பதைப் பயிலும் அனைவரும் அறிவர். அப்படியே சமுதாயம் பண்பாடு என்ற இரண்டினையும் தனித்தனி யாகப் பிரித்து ஆராய்கின்ற நிலையில் ஒருசில கருத் துக்கள், தேவை கருதி - இன்றியமையாமை கருதிஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் எடுத்தாளப் பெற்றுள்ளன. - நல்லதோர் சமுதாயம் - பண்பட்ட சமுதாயம்பாரினை நல்ல நெறியில் வாழவைப்பதாகும். வெறும் மனித உடம்பால் மட்டும் உலகைச் செந்நெறியில் கொண்டு செல்ல இயலாது. மனித உள்ளமே-பண் பட்ட உள்ளமே-அம் மனித சமுதாயத்தை நல்ல வழியில் உலகில் நடத்திச் சென்று, தானும் வாழ்ந்து தரணியையும் வாழ வைத்து, எல்லா உயிர்களையும் இன்பத்தில் ஆழ்த்திச் சிறக்கும் என்பதை அன்று தொட்டு இன்றுவரை ஆய்ந்தவித் தடங்கிய கொள் கைச் சான்றோர் பலர் வற்புறுத்தி வருகின்றார்கள். அவர்களுடைய வாய்மொழிகளை யெல்லாம் இடை யிடையே பெய்து இந்நூலை நான் எழுதியுள்ளேன். அவர்தம் நல்ல உள்ளங்களில் எழுந்த கருத்துக்களே இந் நூலில் இடம் பெற்றுள்ளன. எனவே, அவர் வாய் மொழியைப் பின்பற்றி மனித சமுதாயம்-பண்பட்ட சமுதாயமாக- உள்ளொளி பெற்று ஓங்கும் சமுதாய மாகச்-சிறக்க வேண்டுமென்பது என் ஆசை. அந்த ஆசையை ஓரளவாவது இந்நூல் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையோடு இதை வெளியிடுகின்றேன். தமிழ்க்கலை இல்லம் ,

சென்னை-30. 1-9-62. }  

பணிவார்ந்த அ.மு.பரமசிவானந்தம்.