பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஆசிரியர்களைப் போல் இந்த விஷயத்திலே மனமிழந்து நின்று அமிதமாகப் பாடி வருணிக்காமலும், அளவோடும் நிதானத்தோடும் செய்திருக்கிறார் பண விடு தூது ஆசிரியர். உன் ளுலே இவ்வாறு உடல் முறியப் பாடுபட்ட மின்னலைச் சும்மா விடுவாயோ? என்று மட்டும் முத்தாய்ப்பு வைத்து முடித்துவிடுகிறார். இதன் பின்னர் அவர் தமது நூலை அதிகம் வளர்க்க வில்லை. கணிகையர்கள் பணம் பறிக்கும் சூழ்ச்சிகளைப் பற்றிச் சில வரிகள் பாடிவிட்டு, தமது கதாம்சத்துக்குத் திரு.ம்:-1கிறார், தூதுப் பொருளை வாழ்த்திய பின்னர், அவர் திருநெல்வேலியில் வேங்கடேசனின் திருக்கட்டளைப்படி நடந்த நெல்லை) யுட்யர்..-காந்திமதி திருக்கல்யாண வைபவத் தையும், அதன் பின் கோயிலின் ஆயிரக்கால் மண்டபத்தில் கொலு அமர்ந்திருந்த அந்தத் தெய்வத் தம்பதிகளைத் தரிசித் தாதையும், அங்கு பூங்கோதை என்ற கணிகையைக் கண்டு தாம் மோகமற்றதையும் தூதுப் பொருளிடத்திலே சுருக்க மாக விளம்புகிறார். விளம்பி, -வேண்டு பல மாந்தர் அங்கு நட்பு எனினும் வா வா விலை மாதர்க்கு ஆந்தரியம் உன்னிடத்தில் அல்லவா?.... துரைப்பணம் நீ கைபுகுந்தால், தோகை மட மின்னாள் அரைப் பணம் என் கைக்குள் வசமாமே!-ஐயா! நீ தாது சென்றால் வந்தெனது சோகம் தவிர்ப்பள்; அந்த மாது தன்னை போயழைத்து வா! ஆந்தரியம் ; அந்தரங்கப் பிரியம்.