பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 முதலில் நமக்கு நாடக இலக்கண நூல்களின் பெயர்கள் தான் கிட்டின் பின்னரோ நாடகங்களின் பெயர்கள் தான் கிட்டின. எப்படியிருந்த போதிலும் நாடகங்கள் மட்டும் கிட்டவில்லை! நாடக நாங்கள் இத்தகைய நிலையில், நமக்கு எப்போதுதான் நாடக நூல்கள் கிட்டத் தொடங்கின என்று பார்க்க வேண்டாமா? அவ்வாறு பார்த்தால், இன்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் 17-ம் நூற்றாண்டில் தான் நாம் நாடக நூல்களைக் காணமுடிகிறது. அந்தக் காலத்திலே எழுந்த குற வஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம் முதலிய நூல்கள் தான் அவை. ஆனால் - இந்த நூல்களும்கூட, கிராமிய மணம் மிகுந்த இசைப்பாடல்களால் அமைத் தவையே. அவற்றில் வசனத்துக்கு இடமில்லை. எனினும் இவைதான் பின்னர் வந்த நாடகங்களுக்கெல்லாம் முன்னோடிகளாக விளங்கின. இதன் பின்னர் தமிழில் இசைநயம் மிகுந்த பாட்டுக்கள் வளம் பெற்று வளர்ந்தன. சாகித்தியங்கள், கீர்த்தனைகள், பதங்கள் என்றெல்லாம் தமிழிசை வளம் பெற்றது. இதன் விளைவாக, 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீர்காழி அருணாசலக் கவிராயரின் இராம நாடகக் கீர்த்தனை வெளிவந்தது; இராம நாடகக் கீர்த்தனை முழுவதும் பாட்டாக இருந்த போதிலும், நாடகத்துக்குரிய அமைதி அதில் இருந்தது. இதன் பின்னர் 18-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19-ம் நூற்றாண்டிலும் இத்தகைய கீர்த்தனை நூல்கள் பல எழுந்தன. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தள் சரித் திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம் முதலியனவும் வேறுபல கதையம்சம் கொண்ட கீர்த்தனை நூல்களும் தோன்றின. எனினும் இவற்றிலும் மிகச்சிலவே நாடகங்

  • இரத்தனை பேர் அ

இறு