பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4! பரிசயமும் பழக்கமும் கொள்ள ஏதுவாயிற்று, மேலும் கிறிஸ்தவப் பாதிரியார்கள் தமது மதத்தைப் பரப்புவதற் காக, கல்வி ஸ்தாபனங்களையும் புத்தகப் பிரசுரங்களையும் தொடங்கி வைத்தார்கள். இதன் காரணமாக, அவர்கள் அச்சு எந்திரத்தை நம்மிடையே இறக்குமதி செய்தார்கள். ஏட்டையும். எழுத்தாணியையும் துணையாகக் கொண் டிருந்த நம்மிடையே அச்சு எந்திரமும் காகிதமும் ஒரு மகத்தான புரட்சியையே தோற்றுவித்தன. இந்தப் புரட் சியின் காரணமாக, சென்ற நூற்றாண்டிலேயே தமிழிலக் கியத்தின் மறுமலர்ச்சிக் காலம் தொடங்கிவிட்டது. அச்சு எந்திரம் வந்த பின்னர் நம்மவர்களும் தமிழ் நூல் களை அச்சிடுவதில் கவனம் செலுத்தினர். பரணில் தூங்கிக் கிடந்த பழம்பெரும் தமிழ் நூல்களெல்லாம் அச்சு வாகனம் ஏ. றின. கம்பனும், சேக்கிழாரும், வள்ளுவனும், தாயு மானவரும், மற்றும் பலரும் வெள்ளைக் காகிதத்திலே விருதுகட்டிப் பவனி வந்தனர். ஐந்தும் பத்துமாக இருந்த ஓலைச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் பிரதியாகிப் பல்கிப் பெருகின. பாதிரியார்களும் " மதப் பிரசாரம் ஒரு புற - மிருக்க, தமிழ் வளர்ச்சிக்கும் உதவினார்கள். கால்டுவெல் 'ஐயர் ஒப்பிலக்கணம் எழுதினார். போப் ஐயர் குறள், நாலடியார் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த் தார். . அமெரிக்கப் பாதிரிமார்கள் இரசாயன, உடற் கூறு நூல்களையும் , மொழிபெயர்த்து, அவற்றை யாழ்ப்பாணத் திலே வெளியிட்டார்கள். அதே சமயம் கிறிஸ்தவப் பாதிரி களை எதிர்த்து வாதிடுவதற்காக, யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் ஆங்கிலம் கற்றார். இளம் பொருந்திய ஒரு மொழி யில் அவருக்கேற்பட்ட பரிச்சயத்தால், நாம் ஒரு நல்ல வசன கர்த்தாவைப் பெற்றோம். மேலும் இந்நூற்றாண்டில் தான் இராமலிங்க சுவாமிகள் எளிய, இனிய பாக்களால் சமரச சன்மார்க்கத்தைப் போதித்தார். ஆறுமுக நாவலர், தாமோதரம்' பிள்ளை, சாமிநாதையர் போன்ற சிறந்த