உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 'செய்வதற்கான , காலம் வந்துவிட்டபடியால், அதனை ஒத்திவைத்துவிடுகிறார். இருந்தாலும் ஆசை விடவில்லை. எனவே அவர் மதன சுந்தரியைப் பார்த்து, “அடி 'மதன. சுந்தரம்! உன் மேலே போட்டுக் கொண்டிருக்கும் உத்த ரீயத்தின் முந்தானையைக் கொண்டுவா. முகத்தைத் துடைத்துக் கொள்கிறேன். உனது. தொண்டையிலிருக்கும் கதம்பச் செண்டில் கொஞ்சம் கொடு, என் குடுமியில் சுற்றிக்கொண்டு, கொஞ்சம் கையிலும் , ' வைத்துக் கொண்டுபோய், இரண்டு. எலுமிச்சம் பழத்தோடும் பிரபு வைக் காணவேண்டும்! என்றும் கூறித் தம் நப்பாசைகை வெளியிடுகிறார். ', உடற்பசி. மட்டும் தான் ... அவருக்கு? வயிற்றுப் பசியும் இருக்கிறதே, எனவே அவளிடம் பல காரங்கள் : வாங்கிச் சாப்பிடுகிறார். சாப்பிடும்போது, “அடி! இதுகளெல்லாமே நெய்யில் பாகமானதுதானே... நெய்பட்ட பண்டத்துக்கும் தேவதாசி தொட்டுக் கொடுத்த பண்டத்துக்கும் தோஷமில்லை!” என்று கூறித் தமக்குத் தாமே, சமாதானம் கூறிக்கொள்கிறார். இத்தகைய கும்பகோண ஐயர் டம்பனின் மாளி கைக்கு 'வந்து - சேர்கிறார். அங்கு டம்பாச்சாரி தனது நண்பர் குழாத்தோடு வீற்றிருக்கிறான். அவன் ஐயரை வரவேற்று அவரிடம் டசல்வேறு தாசிகளின் சேமலாபத் தையும் விசாரிக்கிறான். ஐயரும் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்கிறார். டம் : மாணிக்கமாலையெனும் வேசிதனை இப்போது ' வைத்திருப்பவரார் சொல்லும்! கும் : மகா ராஜ ராஜ ராஜ ஸ்ரீ டம்பரே? வாயாடி வரதப்பன் வசமாகினான். டம் : பலராக தஞ்சமாம் பழனி குஞ்சர வேசி , பாங்குடன் இருக்கிறாளா? கும் . பகர் சாவுகாரிகள் பணத்தைப் பறித்தபின் பட்டணம் விட்டேகினாள்!