பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. சந்தில் விடுத்தல் முந்துறு தூதெனம் காட்டியற் புலவர் நாட்டினர் தெளித்தே என்று கூ றிவைத்தது. சிதம்பரப் பாட்டியல் என்ற நூல் 'இருதிணையை விடல் தூது' என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறிச் சென்றது. இது மட்டும் அல்ல. புகழேந்திப் 'புலவர், இயம்புகின்ற காலத்து எகினம் மயில், கிள்ளை, பயம் பெறும் மேகம், பூவை, பாங்கி--- நயந்த குயில், பேதை நெஞ்சம், தென்றல், பிரமரம், ஈரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடர். என்ற செய்யுளின் மூலம் மேற்கூறிய பத்துப் பொருள்களே, தூதுவிடற்குரியன என்று ஒரு வரையறை செய்து பாடி வைத்துவிட்டார், . . ஆனால் இலக்கியம் கண்டதற்குத்தான் இலக்கணமே யன்றி இலக்கணத்துக்காக இலக்கியம், இருக்கவில்லை பல்லவா? என்வே தூது . என்ற இந்தப் பிரபந்தத் துறை பல்வேறு புலவர்களின் மனோகற்பிதங்கள், ' நவநவமான புதுமைக் கற்பனைகள், சொல்ல விரும்பும், வேட்கை கொள்ளும் விஷயங்கள் முதலியவற்றால் புதிய புதிய ரூப லாவண்யங்களைக் காட்டும் முறையில் வளர்ந்தோங்கி வந்திருப்பதையும் நாம் காண முடியும். அந்த வளர்ச்சியைக் காணும்போது, தூதுக்கான இலக்கணம் பற்றிப் புலவர்கள் கூ றிய வரையறைகளையெல்லாம் கடந்து, பல புதிய தூதுப் பிரபந்தங்கள். தோன்றியுள்ளன என்பதையும் நாம் காண இயலும். அவ்வாறு காணும்போது, 'இருதிணைப். பொருள்களில் ஏதேனும் ஒன்றைத் தூது - விடுத்து அதனைக் 'கலி வெண்பாவினால் பாடுவது' என்ற அளவுக்கு {எகினம்:: அன்னம்மா பிரமரம்; (பண்டு!