பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பொழிய வேண்டும். ஏனெனில் இந்தப் பஞ்சம் திடீரென்று வந்த பஞ்சம் அல்ல. பற்பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக மாறி மாறி வந்த பஞ்சம்தான். இப்படியே தலைமுறை தலைமுறையாய்ப் பஞ்சத்திலேயே செத்துப் பிழைத்துவந்தால் எப்படி வாழ்வது? ஆண்டாண்டு தோறும் இப்பஞ்சத்தினால் தொலையாக் கவலை ஆண்டால் எளியவர்க்கு எவ்வாறு இந்நாள் பிழைப்புக்கு : இடமே? தாண்டா மணிவிளக்கே! பலவாறு எம்மைத் துன்பம் செய்ய - ' ' வேண்டாம்; இவ்வளவு போதும் அம்மா செய்த வெவ்வினைக்கே! " பாவம்! ஆண்டாண்டு தோறும், அடிக்கொரு முறை தோன்றும் பஞ்சங்களுக்கெல்லாம் மக்கள் செய்த கொடும் பாவம் தான் காரணம் என்றும், அதன் காரணமாகத் தெய்வமே அவர்களை மாறி மாறித் துன்புறுத்துவதாகவும் ட்,லவர் கூறுகிறார், ஆனால் உண்மையான பாவிகள் யார் என்பதை அவர் உணரவில்லை. அன்னியராட்சியின் சுரண் ட லும், அலட்சிய மனப்பான்மையும், மக்களை முன்னேற விடாமல் தடுத்து, அவர்களை 'என்றென்றும் வறுமையிலும் அடிமைத் தனத்திலும் ஆழ்த்தி வைக்க முனையும் ராஜதந்திர 'மும்தான் காரணங்கள்' என்பதை அவர் உணரவேயில்லை. என்றாலும் பஞ்சம் தீரவேண்டும் என்று அவர் விருப்பப் பட்டார்; நாடு செழித்தால் தான் அது நீங்கும் என்பதையும் அவர் உணர்ந்தார். எனவே நாடு செழிக்க நல்ல மழை பொழிய வேண்டும், மழை பொழிவதற்கு அம்பிகையின் அருள் வேண்டும் என்று கருதினார்; அவள் அருளை நாடினார்: