பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 2 இணஷ்தைசெயற்கை கவிதை - நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன் அவர் நல்ல ரசிகர்; இலக்கியப் பயிற்சியும் பரிசயமும் மிக்கவர்; கவிதைத் துறையிலும் முயற்சிகள் செய்து பார்த்தவர். அவர் . திடீரென்று என்னிடம் பின் வரும் கேள்வியை எழுப்பினார்;

    • நிலவு, மேகம், நதி, கடல் போன்ற இயற்கைப்

பொருள்களைப் பற்றிக் கற்பனையழகோடும், உவமை நயதி. தோடும் கவிதை எழுத முடிவது போன்று, நவீனப் பொருள் களையும் சாதனங்களையும் பற்றிக் கவிதை எழுத முடியுமா? எழுதினால், அவற்றில் இயற்கைக் கவிதையில் உள்ள . அளவுக்கு ' - அழகுணர்ச்சியும், 'கற்பனை நயமும் இன்பமும் தோன்ற முடியுமா? ' உதாரணமாக, தென்றலையும் நிலவையும் பற்றிப் பாடுகின்ற அளவுக்கு, ஓர் அணைக் கட்டையோ, நிலக்கரிச் சுரங்கத்தையோ, மின்சார நிலை யத்தையோ கவிப் பொருளாக்கி, அழகுறப் பாட முடியுமா?” 1. நண்பருடைய கேள்வி அப்படியொன்றும் அர்த்தமற்ற கேள்வியல்ல. ஏனெனில் அப்படிக் கேட்பவர்கள், "நம்மிடையே பலபேர் இருக்கிறார்கள். ஆனால் இத்தகைய கேள்வி ஏன் கிளம்புகிறது? ஒப்புக் கொள்ளப்பட்ட மரபுக்கும், இலக்கணத்துக்கும் உட்பட்டுத்தான் கவிதை எழுத வேண்டும் என்று கருதுபவர்களுக்குத்தான் இத்தகைய