பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த ஏகப் பிரதிநிதியாக விளங்குகிறது என்று சொல்ல வேண்டும்,' - கதை ஆசம்சங் - பஞ்சலட்சணத் திருமுக விலாசம் சுமார் 4600 வரிகள் கொண்டது; முற்றிலும் கலி வெண்பாவினால் ஆக்கப் பெற்றது. இந்நூலுக்கு அதன் முக்கிய கதாம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, உலக ரகசிய வெளிப்படை!' , என்ற ஒரு பெயரும் நிலவி வந்ததாகத் தெரிகிறது. நூலில் காணப்படும் கதைச் சுருக்கம் இது தான்; 1876ம் ஆண்டுக்குச் சரியான தாது வருஷம் பிறக் கிறது. அந்த வருஷம் பிறந்த வேளையில் கிரகக் கோள் களின் நிலையே சரியில்லை. எல்லாக் கிரகங்களும் வக் தரித்துக் கொண்டு நிற்கின்றன. கிரக தோஷத்தால் நாட்டில் மழையில்லை; (வேளாண்மை இல்லை. பூமி வெடித்து வாய் பிளக்கிறது: கன்று காலிகள் எல்லாம் தீவனம் இன்றி வாடி மெலிகின்றன. ஜனங்கள், மழையை வேண்டித் தெய்வங்களுக்குப் பூஜை போடுகிறார்கள். ஏதோ தற்செய லாகப் பெய்த சிறு தூற்றலை நம்பி, கையிலிருந்த விதைத் தானியத்தையும் விதைத்து விடுகிறார்கள். ஆனால் விதைத்த தானியம் முளைகூடக் கிளம்பாமல் கருகிச் சாகின்றது. இந்நிலை யில் உணவு தானியங்களின் விலைகள் எல்லாம் உச்சிக்கேறி விடுகின்றன, அதிக விலை கொடுத்து உணவுப் பொருள்களை வாங்க இயலாது தவிக்கும் ஜனங்கள் தங்கள் உடைமைகளை யெல்லாம் விற்றுப் பிழைக்கிறார்கள். கும்பிக் கொதிப்புக்கு ஆற்றாமல் கண்ட கண்ட பொருளையும் தின்று, நோய் நொடிக்கு இரையாகிறார்கள்; மாள்கிறார்கள். வேளாண்மையை இழந்து தவிக்கும் ஜனங்களுக்கு "லேலை கொடுத்து, பிழைப்புக்கு வழி செய்வதற்காக அரசாங்கத்தார் கண்மாய் மராமத்து வேலைகளைத் தொடங் குகிறார்கள்; கஞ்சித் தொட்டிகள் திறக்கிறார்கள். கண்மாய்