பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 அந்தப் புலவன் வள்ளலிடம் வந்து தன் பிரதாபத்தை யெல்லாம் தானே அளந்து கொட்டுகிறான். மேலும் பலர் மீது தான் வசையும், அறமும் பாடியதாகவும் கூறுகிறான்: அவன து புலமையை மெச்சி, சிவகங்கை மகாராஜன், சித்தம் மகிழ்ந்து அஞ்சாறு சவிதக் கிராமங்கள் விட்டு மெத்த மரியாதை தந்தாள் மேன்மையாய் என்றும் கதை அளக்கிறான். அதன் பின்னர்தான் அந்த வள்ளலின் அருமை பெருமைகளைக் கேள்விப்பட்டு, அவரை நாடி வந்ததாகச் சொல்லி, அஷ்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் முன்னர் பாடிவைத்துள்ள பாடல்கள் சிலவற்றைத் 'தான் பாடின போல் தட தடென" ஒப்புவிக்க முனைகிறான். இதைக் கண்ட அந்த வள்ளல் . பெருமகனோ தன் மனத்துக்குள்ளாக வெறுப் போடிருந்தாலும், அதனை வெளிக்காட்டிக் கொள் ளாமல், நாடி வந்தீர். இப்போழ்து நல்ல சமயமில்லை; ஆடி கழித்து ஆவணி அஞ்சாம் தெய்தி-- ஒடி. அகத்தியமாய் வாரும்; உமக்கு அக்கணமே செம்பொன் தகட்டங்கி சால்வைகளும் தாரேன்! என்று கூறி, புலவனை வேறொரு சமயம் வரச்சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்க்கிறான், ஆனால் விடாக் கண்டனான புலவனோ' காலத்தால் செய்த நன்றியின் பெருமையை யெல்லாம் அடுக்கிக் கூறி, தடையின்றி, உங்கள் மளம் சந்தோஷித்து ஈயும் , கொடைதனையே கொள்வேன் குண மாய்! ' என்று குணங்கி நிற்கிறான். வள்ளலுக்கோ தர்ம சங்கட மாசிவிடுகிறது. ஏனெனில் - வீட்டில் அவரது ராஜ்யம் நடக்கவில்லை; வீட்டம்மாளின் ராஜ்யம்தான் அது. எனவே அவன்,