பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'242 கொள்கிறான். புலவனோ அவன் கையை எடுத்ததும், தன் கையில் வைக்கப்பெற்ற காலணா நாணயத்தைக் காண்கிறேன். உடனே அவனுக்கு ஆத்திரம் வருகிறது , எனினும் அதனை வெளிக்காட்டாமல், கிண்டலாகப் பேசுகிறான், ' ஏன்காணும் நீர் தான் இருந்திருந்தும் இக் கொடையைத் தாக்காது அளிக்கத் தலைப்பட்டீர்?--போங்காணும்! திட்டி.படப் போகுது காண்! சேலையினால் மூடியிதைத் திட்டிகூற்றி ஆங்கே செலுத்தி விடும்!-கட்டி., எம்மூர் . செல்லும் வழிமார்க்கம் திருடர் பயம் 2.ண்டு கண்டீர்! நல்லதுணைகூட்டி நமை அனுப்பும்!” ; என்று பரிகாசம் செய்துவிட்டு, பின்னால் கோபம் மூண்டெ ழத் தன் ஆத்திரத்தைக் கொட்டத் தொடங்குகிறான். பின்னர் தன் கற்றுச் சொல்லியைப் பார்த்து, வசைபாடுவோம் பயலே! வாடா! கொண்டா...! இசையும் எழுத்தாணி எடடா!-பசையற்ற மூடனுட பேரை முதல் எழுதடா! முதலில் கீடென்று எழுத்தைக் கிறுக்கடா! என்று மிரட்டலும் உருட்டலுமாக ஆர்ப்பரிக்கிறான், இதைக் கண்ட வீட்டுக்காரனான வள்ளலுக்கும் கோபம் பிறக்கிறது. உடனே அவன் புலவனை நோக்கி, உன் இசை என்னை என்னடா செய்துவிடும்? என்று பதிலுக்குப் பேசுகிறான். “என்ன கடிநாய்ப் புலவீர்! ஏது, பரிகாசமுடன் சின்ன மொழியால் இகழ்ச்சி செய்திட்டாய்--உன்னை தலை மழுக்கம் பண்ணித் தகுந்த சிட்சை செய்வேன் புலவன் என்றதாலே பொறுத்தேன்! பல நூல்கள் முற்றும் உணர்ந்தோம் என்ன மொழிந்தாய்! சபாஷ்! உனது கற்றறி மோழைத் தனத்தைக் காட்டினாய்!மற்றும் வகை