பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 கற்றுச் சொல்லியோ தனது எசமான் ஓடக் கண்டதும், அர்ஜுனன் விடுக்கும் அம்பும் தோற்றுப்போகும்போது வாயு லேகம் மனோவேகமாக ஓடி மறைகிறான்! வீல்லியப் பிள்ளை தமது புலவன் சரித்திரத்தை. இவ்வாறு நடத்தி முடிக்கிறார். ரி , இது போன்று ஒவ்வொரு கதாம்சத்திலும் வில்லியப், பிள்ளை பரிவுணர்ச்சி கலந்த நகைச்சுவையை அள்ளித் தெளித்து, தமது நூலை இறுதிவரையிலும் : சுவை குன்றாமல் அமைத்துச் சென்றிருக்கிறார். தமிழில் வெளிவந்துள்ள எந்த. வொரு நூலும் இந்த அளவுக்கு நகைச்சுவை மலிந்ததாக. பஞ்சலட்சணத்துக்கு முன்னும் அமையவில்லை; பின்னும் அமையவில்லை. அந்தப் புகழுக்கு (1)ற்றிலும் , தகுதியும். பெருமையும் வாய்ந்த நூல் பஞ்சலட்சணம். மேலும் சமுதா யத்தில் நிகழ்ந்த, பெரும்பான்மையாலோ மக்களின் வாழ்வை உலுக்க் குலுக்கிய ஒரு சரித்திர நிகழ்ச்சியை, தாது வருஷப் பஞ்சத்தை நாற்பொருளாகக் கொண்டு, அதில் மக்கள் பட்ட துன்ப துயரங்களையும் திறமையோடு வருணித்த இலக்கியம் என்ற முறையிலும் இந்நூலே தலைசிறந்து நின்று, அற்புதமான சமுதாய இலக்கியமாக நமக்குக் காட்சி யளிக்கின்றது. ஆனால் இத்தகைய அருமையான நூல் இன்றைக்குச் சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன்பே வெளி வந்திருந்தும், இந்நூால் பல இலக்கிய ரசிகர்கள், இலக்கிய விமர்சகர்கள் கவனத்துக்கோ, கண்ணுக்கோ புலப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருந்தது நமது துரதிருஷ்டமே யாகும். இந்த அருமையான நூலை யாவரும் படித்து மகிழத் தக்க வாறு, தக்க குறிப்புக்களோடு அழகிய முறையில் பதிப்பித்து

  • 'பிட வேண்டியது தமிழ் நாட்டுக்குச் செய்யவேண்டிய:

இன் நியமையாத கடமையாகும்.