பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 35 பூமியிலே காலூன்றி நிற்பதால், விஸ்வரூபமெடுத்த. - திருமாலே. நிகர்த்த தோற்றமுடையன; எழுத்துக்களான் செய்திகளைச் சுமந்து செல்வதால் அது பிரமனையும் நிகர்க்கிறது': மயில் மீது ஏறி அகிலத்தைச் சுற்றிவந்த முருகவேளைப்போல், அதே சமயம் எந்தவொரு வாகனமும் இல்லாமலே நொடிப்பொழுதில், உலகனைத்தும் செய்தி யனுப்பும் திறம் படைத்ததால் அது முருகனையும் மிஞ்சி நிற்கிறது - என்றெல்லாம் அவர் தந்தியின் சிறப்பைக் கடவுளர்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். மேலும் அதனை ஞான குருவென்றும், சித்தனென்றும், தவசியென்றும், சூரியனென் றும். சந்திரனென்றும் உவமித்தும் அவர் புகழ் கிறார். வாசா அடக்கி, மவுனம் உற்ற யோகியர் போல் பேசாது பேசும் பெருங்குருவே! தேசு உலகில் கண்டும் உனைநின் மகிமை காணாது உளநெகிழ்ச்சி" கொ ண்டு அதிசயிக்க வரும், கோமானே!-பண்டதாம்' சித்து அசித்தைத் தேர்ந்தவரு ம், சித்தர் அறு மூவரும், மோ' சித்து உன் திறம் அறியாச் சித்தனே! நித்திரை ஆ" கார வர்ச்சிதத் தொடு நற் காற்று மழைக்கு அஞ்சும் , வி - சாரம் அற்று நின்ற தபசியே! - தீரமொடு சே மம் உரைத்து, அந்தச் செய்திக்கு உரியர் முகத் தாமரை மலர்த்தும் மார்த் தாண்டனே! -பூமிசையில் பண்புற நின் வாக்கை எதிர் பார்த்திருக்கும் மாந்தர் விழித் தண் குவளை பூப்பவரும் சந்திரனே! - - - - வாசா : வாக்கு, சித்து அசித்து: சிந்தனையும் ஜடமும்: அறு மூவர் : பதினெண்சித்தர்: மார்த்தாண்டன்: சூரியன்.