பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 - -சத்தியமாய் மற்றும் உள மன்னர் மகிமண்ட லாதிபரும்' சுற்றமொடு வாழ்ந்து கூகிப்பதுவும் சொற்றல் வர்த்தகர்கள் எல்லோரும் மாநிதியம் மேன்மேலும் விர்த்தி களித்து விளக்குவதும் வர்த்தமா - னப்பத்திரிகை எந் நாளும் நலியாது நில : வப் பெற்ற பாக்கியம் இவண் வந்ததுவும் செப்பரிய தூமச் சகடம் நெடுந் தூரமெலாம் சற்றும் அசை பாமல் சரித்து வரும் அற்புதமும்... தந்தியின் உதவியினாலேயே நடக்கின்றன என்றும், இவ்வாறு விஞ்ஞான பூர்வமான வெற்றியின் மூலம் மக்கள் பல்வேறு அதிசயங்களைச் சாதிப்பது கண்டுதான், தேவர்களும் தெய்வங் களும் அயர்ந்துவிட்டனர் என்றும் அவர் கூறுகிறார். அதாவது இந்திரனுக்கும் ஆயிரம் கண்களும் பிரமனுக்கு எட்டுக் கண் களும், ஆறுமுகனுக்குப் பன்னிரண்டு கண்களும் சிவனுக்கு மூன்று கண்களும் இருப்பதெல்லாம் தந்தி எனும் இந்த விஞ்ஞான அதிசயத்தைக் காண்பதற்குத்தான் என்றும், திருமால் மால் ஆனதும், அதாவது . மயக்கமுற்றதும் (மால் : மயக்கம், தேவர்களெல்லாம் அந்தரத்தில் விழித்த கண் மூடாமல் நிற்பதும் இந்த அதிசயத்தைக் கண்டதால் ஏற் பட்ட விளைவுகள் தான் என்றும் புலவர் சமத்காரமாகக் கூறு. கிறார். ஆம். மானுடத்தின் வெற்றியை இவ்வாறெல்லாம் வியந்து பாராட்டிவிட்டு, பின்னர். அதன் உதவியை நாடி அதனைத் தூதுவிட முனைகிறார் நூலாசிரியர். சென்னை மாநகரில் பார்க். டவுண் என்பது ஒரு பெரிய பிரதேசம். அந்தப் பிரதேசத்துக்கு அப்பெயர் வந்ததற்குக் காரணம் அங்கு " மக்கள்: - பூங்கா ”...{People's: Park}