பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மோகனம் செய்யவல்ல மோகினியான் இன்பச மோகன ராகம்பாட மோகமுற்றேன்... கோடி கொடுத்தாலும் குவலயத்தில் பாடாதாம் தோடி ராகம் பாடச் சொக்கினேன்--நாத காமக் கிரியை நயந்திசைத்தாள்; அப்பொழுதே காமக் கிரியை செய்யக் காமுற்றேன்... நஞ்சுருட்டித் தீட்டு நளினவிழிப் பெண்பெருமாள் செஞ்சுருட்டிப் பாடத் தியங்கினேன் ... " என்றெல்லாம் அவதானியார் தமது மோகத்தை எடுத். துரைக்கிறார். இதன் பின்னர் அந்த நடிகை பரத நாட்டிய வகைகளை யெல்லாம் ஆடிக் காட்டுகிறாள். அவளது நாட்டி! மும் அவரது உள்ளத்தைப் படாதபாடு படுத்துகின்றது. தாட்டிகமாய் மற்றுமுள தக்க நடனம் பலவும் சாட்டையிலாப் பம்பரம் போல் தாவியே -நீட்டி நடித்தாள்; நொடித்தாள், நாணயப் பதங்கள் படித்தாள்; பரதம் அனைத்தும் முடித்தாள்! துடித்தேன்; மதுரச் சுவைக் காமத் தீங்கள் குடித்தேன்; இதயம் குழைந்தேன்! என்று அவர் அந்த மோகலாகிரியை எடுத்து விளம்பு கிறார். கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கே இந்தப் பாடானால், காணவந்த சபையோருக்குக் கேட்பானேன்? அவர்களும் அவளது நாட்டியத்தில் மயங்குகிறார்கள். பரிசுகளை வாரி வழங்குகிறார்கள்; அவளுக்கு ' “அரங்கநாயகி' என்ற பட்டத்தையும் சூட்டிவிடுகிறார்கள். இதையெல்லாம் காணக் காண அவதானியாருக்கு அவள் மீது மோகம் மேலும் அதிகரிக்கிறது. எனவே நாடகம் அரங்கேறி முடிந்த பின் னும் அவரை விரகதாபம் வாட்டியெடுக்கிறது. இரவெல் லாம் தூக்கமின்றிக் கழிகிறது. அதனால் அவர் அவளை