பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 உள்ள உறவை அம்பலப்படுத்தி விடுகிறான் விதூஷகன். எனவே அவளுக்குத் தன் கணவர் மீது நியாயமான கோபம் பிறந்துவிடுகிறது. இதனால் அவதானி ஒரு நாள் வீட்டுக்குச் சென்று மனைவியை உலாவு படைக்குமாறு வேண்டிய சமயத் தில் அவள் சீறிப் படபடத்து விடுகிறாள். புத்தி கெட்டுப் போனவர்க்குப் பெண்டாட்டி ஓர் கேடா? பொத்தைச் சிறுக்கி யிடம் போ!" என்று பேசிவிடுகிறாள். இதனால் அவதானி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். பின்னர் விதூஷக னிடம் வீட்டில் நடந்ததைக் கூறுகிறார். நண்ணு கல்கத் துக்கு நாற்றங்கால்' போல், பாலுக்கும் காவல். பூனைக்கும் தோழனாகவுள்ள அந்த விதூஷகன் மீண்டும் அவருக்கு உபதேசம் செய்கிறான். மெத்தப் படித்தவர்தாம் மேவிய பெண்டாட்டியரை வைத்துப் படைக்கும் வகையறியார்-ஜ.த்தமிமார் காசுமணிக் கால் மாட்டில், கைகட்டி, வாய்பொத்தித் தேசிகர் முன் நின்று தொழும் சீடரைப்போல்--- சி அவர் ஆட்டிப் புடைக்க, ஆசார உபசாரம் செய்து, ஈட்டிய பொன் காணிக்கை என்றளித்து.- போட்டதை உண்டு ஏங்கித் தவிப்பார்கள்; இத்தன்மையாய், மனையைத் தாங்கித் தவிக்கின்றீர் தாரணியில்- நாணயமாய் நெய்யும் பருப்பும் நிதம் தவறாது உண்டு, வலு ஏய்திய வாய் சும்மா இருக்குமா?- கைவீசித் தாடையின்மேல் எட்டி., தட்படெனக் கைத்தாளம் போடாமல் விட்டது உம் புண்ணியம்தான்! என்றெல்லாம் எடுத்துக் கூறி, அவரை மனம் மாற்றுகிறான். அதன் மூலம் அவர் தமது மனைவியையும் வீட்டையும்,