பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 உயர்ந்த இலக்கியத் தரத்தை எட்டிப் பிடிக்கும் அள வுக்கு வலு இல்லாத நூல் தான்; என்றாலும் சென்ற தடத்திலேயே சென்று சிலம்ப வித்தைகள் காட்டா மல், விஞ்ஞான சாதனமான் ஒரு நவீன கருவியைத் தமது தாதுப் பொருளாகக் கொள்ளவும், பத்தொன் பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை நகரில் மேலோங்கி நின்ற மேடை நாடக இயக்கத்தை யொட்டி, எதார்த்த நிலையைப் பிரதிபலிக்கும் வகை யில் தமது கனதயம்சத்தை அமைத்துக் கொள்ளவும் அவர் முன்வந்து முயன்ற செய்கையே நமது பாராட் டுக்கும் கவனத்துக்கும் உரியதாகும். அந்த வகையில் தமிழ் நாட்டின் எதார்த்த வாத் இலக்கியப் பரம்பரை பில் அவருக்கும் ஒரு சிறு இடம் உண்டு; அதனை நாம் மறுத்துவிட முடியாது.