பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6) 4;திர்களை எடுத்து நாடகங்களாக அமைத்த காலத்தில்” {ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களில் ஒன்றாக, இதனைச் சில விமர்சகர்கள் பதிப்பார்கள். இந்த நாடகம் கிரேக்க நாகரிகத்தின் நாற்றங்கால்' எனப் புகழப்பெற்ற ஏ தன்ஸ் தகரத்தில் வாழ்ந்துவந்த டைமன் என்ற குபேரக் கோமானைப் பற்றிட.4 இ', தண்ணீர் பட்ட பாடாக இருந்த அவனது தாராளத் தன்மையால் அவன் எப்படி. அழிந்தான் என்பது தான் கதை. சீரும் செல்வமுமாக இருந்த டைமன் விதியின் விளைவாலும், மனிதர்களின் நயவஞ்சகத்தாலும், நன்றி கெட்ட தன்மையாலும், நிலைமாறிச் சீரழிந்த காலத்தில், பனித சமுதாயத்தின் மீதே வசைமாரி பொழிகிறான். அப்போது அவன் பணத்தின் தன்மையைப் பற்றிக் கசிந்தும் கலன்றும் வார்த்தைகளைக் கக்குகிறான். இந்த நாடகத்தை எழுதிய காலகட்டத்தில் ஷேக்ஸ்பியரே அத்தகையதொரு

  • சந்த, கைத்த மனோ நிலையில் தான். இருந்தார் என்று

ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள். அந்தக் காலத்துப் படைப்புக்களில் அவர் எழுதிய சில நாடக வசனப் பகுதி களில் புரையோடிப் போயிருந்த கசப்புக்கும் கைப்புக்கும் ஈடாக, உலக இலக்கியத்தில் வேறு எதுவுமே இல்லை என்று சொல்லக்கூடிய விமர்சகர்களும் உண்டு. அந்த நாடகத்தில் டைமன் செல்வத்தைப் பற்றிக் சுசீந்துபோய்ப் பேசுகிறான். அந்தப் பேச்சு பின்வருமாறு:

  • " தங்கம்! மஞ்சள் நிறமாகப் பளபளக்கும் மதிப்புரிய

தங்கல்!... இதோ இந்தத் தங்கம் கறுப்பை வெளுப் பாக்கிவிடும்! கெட்டதை நல்லதாக்கும்; தவற்றைச் சரியாக்கும்; கீழ்த்தரத்தை மகோன்னதமாக்கும்; முது மையை இளமையாக்கும்; கோழையை வீரனாக மாற்றி விடும்!... ஏன்? இது உங்கள் பக்கலிலிருந்து குருமார்களையும் குற்றேவல்காரர்களையும்கூட, இழுத்துப் பறித்துப் பிரித்து விடும். உடல் பருத்த மனிதர்களின் திண்டு. திமாசு -