பக்கம்:சமுதாய இலக்கியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9! கணைக்கிலே துண்டுவிழும் பகுதியை நிரப்புவதற்காக, கணக்கப்பிள்ளைமார்கள் செய்யும் கள்ளக் கணக்கு விவகாரங் களையும் அவர் அம்பலப்படுத்தத் தயங்கவில்லை, -அட்டவணைச் சீட்டுப் பதிவைத் திரும்பக் கூட்டி, துரைமுன், கேட்டுக் கழித்ததெல்லாம் கிண்டிப் பார்த்து ஓட்டுக்கு இலக்காத் தொகை இட்டெழுதியே நெஞ்சைக் , கலக்காத வண்ணம் கலக்கி-அலக்கழிக்கும் பிள்ளைமார் சற்றே உன் பேர் கேட்குமுன்னர் அந்தக் கொள்ளை யெல்லாம் தீராதோ கோமானே! கணக்கில் எப்படியெப்படியோ பதிவு செய்து, கொடுக்க வேண்டிய, 'கணக்கில் ஓட்டாஞ்சில்லிக்குச் சமமாகத் தொகையை ' எழுதிவைத்து, ஊரை ஏமாற்றக்கூடிய கண்க்கப்பிள்ளைமார்கள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டுமென்றா லும் உனது உதவியல்லவா தேவைப் படுகிறது என்கிறார் ஆசிரியர். ஆமாம். அந்தக் கணக் குப்பிள்ளைLDார்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தால் கணக்கிலே அவர்கள் செய்யும் கொள்ளை யெல்லாம் சரியாகி விடுமல்லவா? . புலவர்கள் பாரு ஏழை எளியவரையும், பணக்காரரையும், இருவருக்கு மிடையேயுள்ள, கணக்கர்கள், மணியக்காரர்கள் போன்ற இடைத்தட்டுத் தரகர்களையும் பற்றிப் பாடிவந்த நூலா சிரியர் தமது வர்க்கத்தைப் பற்றிப் பாடவும் மறந்துவிட வில்லை. புலவர்கள் ஏதேதோ பாடல்களைப் பாடிக்கொண்டு, செல்வம் படைத்தவர்களை நாடிச் செல்வதையும், அங்கு அவர்கள் பெறுகின்ற 'சன்மானத்தையும் அவர் வயிற்றெரிச்ச லோடு பாடுகிறார்,