பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

நாத்திகம் என்ற தத்துவம் இயல்பிலேயே இல்லை. அதை ஆத்தீக உலகமே உருவாக்கியது என்பது அறிஞர் அண்ணாவின் கருத்து. இந்தக் கருத்தினை “குமாஸ்தாவின் பெண்” என்ற கதையில் சீமானாகிய சோமுவுக்கும் ஏழையாகிய இராகவனுக்கும் நிகழும் உரையாடலில் சித்தரித்துக் காட்டுகிறார். அந்தப் பகுதியை அப்படியே தருகிறோம். படித்துப் பாருங்கள்.

இராகவன் : உம்மை இலட்சாதிபதியாக வைத்திருப்பது அவன் செயல். என்னை பிட்சாதி காரியாக வைத்திருப்பதும் அவன் செயல்; மிக நல்லவன்!

சோமு : இராகவா, நீ நாத்திகம் பேசுகிறாய்.நாக்கு கூசவில்லையா?

எங்கே நாத்திகம் காட்டுகிறது? மீண்டும் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! இந்தப் பார்வையில் தான் காரல்மார்க்ஸாம் நாத்திகரானார். தலைவர் பெரியாரும் நாத்திகரானார். அறிஞர் அண்ணாவும் நாத்திகரானார். சமய நம்பிக்கை உடையவர்கள் அருள் கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடவுளை நம்புகிற துணிவைவிட, கடவுள் தத்துவத்தைச் செயல்படுத்தி எல்லோரும் இன்புற்று வாழ வழிவகை செய்யவேண்டும். அதை செய்யத் தவறினால் மன்பதைக்கும், மன்பதையின் மன சாட்சியாகிய கடவுளுக்கும் போலி ஆத்திகர்கள் பகைவர்கள் ஆவார்கள்.

நாத்திக உலகம் நலவிருந்தாகிவிடும். உத்தரவாதம் எது? அண்ணாவின் கருத்து “மடாதிபதிகள் மடத்தை ஆள்வதைக் காண்கிறோம். மக்களிடை ஆள்வதில்லை;மக்களிடிை வருவதுமில்லை” என்பது. இதனை மனச் சாட்சியுடையோர் மறுக்கமாட்டார்கள். காலத்தின்