பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
104 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

 

இந்தப் பண்பு மூலம் அவரது படைப்புக்கு, அவருடைய இலக்கியத்துக்கு, அவரே இலக்கியமாக இருப்பது நெகிழ்ந்து பாராட்டக்கூடியது.

அண்ணல் காந்தியடிகளிடத்தில் அறிஞர் அண்ணாவுக்கு நிறைந்த ஈடுபாடு உண்டு. இந்த ஈடுபாடு காலத்திற்குக் காலம் மாறியும் வந்திருக்கிறது என்பதிலே உண்மையுண்டு. ஆனால், ஈடுபாட்டையாரும் மறுக்க முடியாது.

‘உலகப் பெரியார் காந்தி’என்ற நூலில் நமது தலைமுறையின் வேலை, ‘இந்த நாட்டை - காந்தி நாடாக்குவது’ என்று தெளிவாகவும் உறுதியாகவும் கூறுகிறார். அண்ணாவின் வார்த்தைகள் இதோ! அப்படியே படித்துப் பாருங்கள்.

“ஏழை ஈடேறி ஏழை உரிமை பெற்று விளங்கும் நாடு மக்களில் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்ற நிலையில்லாத நாடு எல்லோரும் தோழமையுடன் வாழும் நாடு - இந்த நாடு; காந்தி நாடு - காண்பது தான் நமது தலைமுறைக்கு உள்ள வேலை” என்பது அவர் வாக்கு. இதனை உணர்ந்து, ஓயாது உழைப்பது அண்ணாவின் - நாண்மங்கல விழாப் பரிசு!

口口口

口 சென்னையில் 21.9-68ல் நிகழ்ந்த அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாச் சொற்பொழிவு.