பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஜப்பானியர்களைப் போல நடப்போம்! இது பாரதியின் ஆசை!

பாரதி சாதிகளின் சங்கமத்தை மட்டும் விரும்பவில்லை! மதங்களின் சங்கமத்தையும் விரும்புகிறான்! 1906 - லேயே நாடுமுழுதும் சிவாஜி திருவிழாவும் அக்பர் திருவிழாவும் கொண்டாட வேண்டும் என்று எழுதியுள்ளான்.

பாரதி பாரத சமுதாயத்தில் சமத்துவம் நிலவ உழைத்தவன். சமத்துவமே பாரதியின் கொள்கை, கோட்பாடு இந்திய நாட்டில் சாதி, வகுப்பு வேறுபாடு களின்றிப் பணிகளில் அமர்த்த, ‘சுக்கிர நீதி’ வழி வகுத்திருக்கிறது என்ற ஆதாரத்தை எடுத்துக்காட்டுகிறான்.

“எல்லா மனிதரும் சமம் என்ற கொள்கையை, சமூக வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும் வரை மானிட ருக்குள்ளோ பொறாமை, பகைமை, இகல், வஞ்சனை, போர் முதலியவை நீங்கள்” - என்று பாரதி அறிவுறுத்துகிறான்.

பாரதி அறிவுறுத்துவதை நாம் ஏற்போமா? நடை முறைப்படுத்துவோமா? சமத்துவ கொள்கைக்கு, கோட்பாட்டுக்கு பாரத மாதாவே லோக குருவாக இருக்க வேண்டும் என்பது பாரதியின் ஆசை!

மனிதனை மனிதனாக மதிக்காமல் சமத்துவமாக நடத்தாமல் கொடுமைகள் பல இயற்றுவதை பல கோணங்களில் பாரதி, கண்டிக்கிறான். சங்கரன் பிள்ளை உரையாடல் உயர்சாதி மனப்பான்மையைச் சாடும். சாடலுக்கு ஒரு எடுத்துக்காட்டு! சங்கரன் பிள்ளை.