பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 口 தவத்திரு குன்றக்குடி அடிகளார்மனம் விட்டுப் பேசுங்கள்! கலந்து பழகுங்கள்! பரஸ் பரம் நல்லெண்ணத்தை - நம்பிக்கையை பரிவர்த்தனை செய்து கொள்ளுங்கள்! அன்பு செய்யுங்கள்! அன்பைப் பெறுங்கள் குற்றங்களைப் பார்க்காதீர்! குணங்களையே கண்டு பாராட்டுங்கள்! குற்றங்கள் தாமே மறையும்!

மனிதனுக்கு மனிதன் பகை என்பது மூடத்தனமானது. இயற்கை நியதிகளுக்கு முரணானது. மனித நாகரிகத்தின் மூலம், அன்பே இன்பத்தின் வைப்பு. அன்பேயாம் என்கிறான்.

அன்பு! - மனித உலகத்தில் அன்பு எளிதாகத் தோன்றிவிடாது. நிலத்தில் பயிர் எளிதில் வளருமா? அதுபோலத்தான்! அன்புக்குப் பகை அழுக்காறு - பொறாமை பொறாமைக்கு களம் வளமை - வறுமை. இருவேறு நிலைக்களன்கள்!

வெறும் சோற்றுக்கே கூடப் பஞ்சம் நிலவுமாயின் அன்பு தோன்றுமா? ஒரு சிலர் உண்டு மகிழ்ந்திடலாம்! பலர், பசியால் வாடித் துன்புறுவதாக அமைந்துள்ள சமுதாயத்தில் அன்பு பயிலுதல் - அன்பு வளருதல் இயலாது. சோற்றுப் பஞ்சத்தை நீக்கி, இங்கு வாழும் மாந்தருக்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை முதல் இலட்சியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மானிடம், சுவர் - வேலி இவற்றுக்கிடையே சொத்துக்களை முடக்கி சிறை வைத்துள்ளது. செல்வர்கள், அன்பு கருதியும், அறம் கருதியும் ஏழைகளுக்கு வாழ்வளிக்க முன்வர வேண்டும். அப்படி அவர்கள் வர வில்லையெனில், “நிலத்தை சகலருக்கும் பொது என்று அறிவிக்க வேண்டும்” என்று பாரதி முடிவு செய்கிறான்! அது மட்டுமா? உடையவர்களுக்கு ஓர் அறிவுரையும் கூறுகிறான்.