பக்கம்:சமுதாய வீதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翠县 சமுதாய வீதி

நாடகக் குழுவுக்கான நடிகர், நடிகையர் தேர்தல் தொடங்கியது. தூரத்தில் சோபாவில் அமர்ந்து விலகி யிருந்தபடியே அந்த இன்டர்வ் யூவை வேடிக்கை பார்க்க லானான் முத்துக்குமரன். மேற்கு நாடுகளில் செய்வது போல் நெஞ்சளவு, இடையளவு, உயரம் என்று பெண் களை அளக்காவிட்டாலும், கோபால் கண்களால் அளக் கும் பேராசையோடுக.டிய அளவையே முத்துக்குமரனால் கவனிக்க முடிந்தது. ஏதோ நடிப்புக்கு போஸ் கொடுக்கச் செய்வது பேர்ன்ற பாவனையில் சில மிக அழகிய பெண்களை விதவிதமான கோணங்களில் நிற்கச் சொல்விப் பார்த்து மகிழ்ந்தான் கோபால். அந்தப் பெண்களும் தட்டாமல் அவன் சொன்னபடி எல்லாம் செய்தார்கள். ஆண்களை இண்டர்வ் யூ செய்ய அவ்வ ளவு நேரமே ஆகவில்லை. சுருக்கமாக சில கேள்விகள்பதில்களோடு ஆண்கள் இண்டர்வ் யூ முடிந்துவிட்டது. தபாலில் முடிவு தெரிவிப்பதாகச் சொல்லி எல்லாரையும் அனுப்பி வைத்தபின்-கணவனுக்கு அருகில் அடக்கமாக வந்து அமரும் மனைவியைப் போல் முத்துக்குமரனுக் கருகே பவ்யமாக வந்து உட்கார்ந்தான் கோபால்.

'ஏண்டா கோபாலு! நெஜமாகவே நாடகக் கம் பெனி வைக்கப் போlயா?...அல்லது தினசரி குஷாலாக நாலு புதுப் பெண்களின் முகங்களையும், அழகுகளையும் பார்க்கலாம்னு இப்படி ஓர் ஏற்பாடா? ஒருவேளை, அந்தக் காலத்திலே நாடகத்திலே ஸ்திரி பார்ட் போடப் பெண்களே கிடைக்காம நீ ஸ்திரீ பார்ட் போட நேர்ந்த தற்காக இப்ப தினம் இத்தினி பேரை வரவழைச்சு பழி வாங்கறியா, என்ன? இல்லே...தெரியாமத்தான் கேக்க றேன்?"

'அன்னிக்கி இருந்த அதே கிண்டல் இன்னும் உங். கிட்ட அப்படியே இருக்கு வாத்தியாரே! அது சரி...! எங்கே தங்கியிருக்கேன்னு இன்னும் நீ சொல்லவே இல் லியே?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/26&oldid=560819" இலிருந்து மீள்விக்கப்பட்டது