பக்கம்:சமுதாய வீதி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 0 சமுதாய வீதி

மாகத்தான் இருக்கும் போலேருக்கு. அவள் பொய்க் கோபத்தோடு இப்படிக் கூறியபோது அவளுடைய உதடு களில் புன்னகையும், முகமும் மிக மிக அழகாயிருந்தன. அவன் மகிழ்ச்சியிலே திளைத்தான்.

'தரையிலே ஜில்னு ஈரம். வீனா நாளைக்கு ஜுரம் வந்து கஷ்டப்படப் போறே...'

'இப்ப நீங்க என்ன பண்ணனும்கிறீங்க-?’’ 'ரொம்ப நாளா நடிச்சு நடிச்சு நடிக்கறது உனக்கும் அலுத்திருக்கு, எனக்கும் அலுத்திருக்கு. இனிமே நாம வாழனும்-'

முத்துக்குமரன் எழுந்து நின்று அவளுடைய கரங்க. ளைப் பற்றினான். அவள் வீணையாக வளைந்து அவன் மேற் சாய்ந்தாள். அவனுடைய பரந்து விரிந்த மார்புப் பகுதியும், திரண்டு பருத்த தோள்களும் அவளுடய பூங் கைகளால் வளைக்க முடியாத அளவு பெரியவையாக இருந்தன. முத்துக்குமரன் அவள் காதருகே முணுமுணுத் தான்:

'என்ன ஒண்னும் பேச மாட்டேங்கிறே?’’ - உலகத்தின் முதல் பெண் போல் அவள் அவன் முன் நாணிக் கண் புதைத்தாள்.

ஏன் பேச மாட்டேங்கிறே?" அவள் பெருமூச்சு விட்டாள். மூச்சு விடுவதுகூட அநுராக சப்தமாக அவன் செவியில் ஒலித்தது.

'சம்சாரிக்கும் பாடில்லா?’ என்று தனக்குத் தெரிந்த கொஞ்ச மலையாளத்திலேயே அவன் கேட்டபோது, அவ ளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. அவளு டைய பூங்கைகள் அவன் தோள்களில் இருந்தன. இரு வருக்குமிடையே சந்தோஷத்தின் எல்லை போன்றதொரு மெளனம் நிலவியது.

அந்த தோள்களில் ஒன்றில்தான் அன்று இரவு மாதவி பத்திரமாக உறங்கினாள்.

விடிந்ததும் அவள் அங்கே நீராடினாள். புதிய புடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/272&oldid=561074" இலிருந்து மீள்விக்கப்பட்டது