பக்கம்:சமுதாய வீதி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா.பார்த்தசாரதி 9 :

டாமா? --என்று அவளை வேதனைககு ஆளாக்காமல் முத்துக்குமரனும் வருவதரக அவளிடம் சம்மதித்தான். தெய்வத்தின் வரத்தைத் தனக்குச் சாதகமாகப் பெற்று விட்ட ஒரு பக்தையின் களிப்போடு அவள் அவன் வர இணங்கியதற்காக அவனைப் பாராட்டலானாள்.

"உங்களிடம் ரொம்பப் பெருந்தன்மை இருக்கிறது. அதுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.'

"யாருக்காகவும் செலவிடாத பெருந்தன்மையை உனக்காக நான் செலவிடுகின்றேன் என்பதை நீ புரிந்து கொண்டால் சரி-என்று சிரித்துக் கொண்டே அவளி டம் கூறினான் அவன். இப்படி இவர்கள் பேசிக் கொண் டிருந்த போதே, கோபாலும், ஜில் ஜில்-கணியழகனும் வந்து சேர்ந்தார்கள்.

இவர்தான் "ஜில் ஜில் எடிட்டர் கனியழகு. இவர் முத்துக்குமார். நம்ப நண்பர். இப்ப புது நாடகம் நமக்காக எழுதறாரு' என்று பரஸ்பரம் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் கோபால். - -

"ஏற்கனவே டிசம்பர் மாதம் ஒரே குளிர். நீங்க வேற "ஜில் ஜில்’னு வந்து நிற்கிறீங்க. இன்னும் ரொம்பக் குளிருது...' என்று முத்துக்குமரன் வந்த ஆளை வம்புக்கு இழுத்தபோது மாதவி வாயைப் பொத்திக்கொண்டு தனக்குள்ளேயே அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங் கினாள். - -

'சார் ரொம்ப ஹாஸ்யமாவில்ல பேசறாரு...பிரமா தம்-பிரமாதம்'-என்று ஹாஸ்யம் தடை விதிக்கப் பட்ட தீவிலிருந்து வந்தவன் போல் ஆச்சரியப்படத் தொடங்கினான் ஜில் ஜில். அவனுடைய உருவத்தில்வேஷ்டி ஜிப்பாவைத் தொங்கப் போட்டிருந்தது என்று தான் சொல்லலாமே ஒழிய அவன் உடுத்திக் கொண்டிருந் தான் என்று சொல்ல முடியாதபடி அத்தனை ஒல்லியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சமுதாய_வீதி.pdf/93&oldid=560888" இலிருந்து மீள்விக்கப்பட்டது