பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

சமுத்திரக் கதைகள்


அடித்தான். அவரும், அந்த நோட்டுக்கள் எவ்வளவு தேறும் என்பதை குத்துமதிப்பாய் நோட்டமிட்டபோது, இவன் என் பங்கைக்கூட எடுக்கலை ஸார்...’ என்றான். உடனே அவர், நல்லா இரு. லட்சுமி கடாச்சம் கிட்டட்டும்...’ என்று ஆசிர்வதித்துவிட்டு, அவனது நெற்றியில் குங்குமம் வைத்தார்.

பூஜை அறையிலிருந்து பக்திப் பரவசமாய் வெளியேறிய சாமிநாதன், ஊஞ்சல் பலகை அம்மாவை கண்களால் கும்பிடுவதுபோல், விழிகளை செங்குத்தாய் நிமிர்த்திவிட்டு, வீட்டுக்கு வெளியே, வந்து பூட்ஸ்களை மாட்டப் போனபோது, உள்ளேயிருந்து ஒரு கைதட்டல். திரும்பிப் பார்த்தால், அசோகச் சக்கரத்தின் அருமை மகன் வசந்த்...

சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், பூட்ஸ்களை கைகளால் துக்கிக்கொண்டே, அவன் பக்கம் ஓடினான். இது வாரிசுக் காலம். அவனோ தகப்பன் சாமி. நாயைக் கூப்பிடுவதுபோல் கூப்பிட்டாலும், வாலுக்கு பதிலாக தலையாட்டியாக வேண்டும். அந்த இளைஞன், புன்சிரிப்பாய் பேசினான்.

“திருப்பதிக்கு ஏ.சி. வண்டி ஏற்பாடு செய்ததற்கு ரொம்ப நன்றி பிரதர்...”

“ஓங்களுக்குச் செய்யாமல் யாருக்குச் செய்வேன்...? அப்புறம் ஏழுமலையான்கிட்ட எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்க டாக்டர் தம்பி...”

“நான் மலைக்குப் போகல... நண்பர்களோட அடிவாரத்துக்குத்தான் போறேன். ஒங்களுக்குப் புரியுமுன்னு நினைக்கேன். ஒங்ககிட்ட சிக்கி இருக்கிற ஏதாவது ரெண்டு கேஸ்களை தள்ளி விடுங்க...”

“ரொம்ப லேட்டா சொல்றீங்களே...”

“நீங்க நினைத்தா குடும்பப் பெண்ணையே பிராத்தலுல புக் பண்ணலாமே...?”

“பார்க்கலாம்..."