பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலந்தி வலை

93


“அப்போ மாமூலும் தொடர்ந்து கொடுக்கணும்; மாமா வேலையும் செய்யனும், மெமோவுக்கு மேல மெமோவும் வாங்கணும். என்ன ஸார் நியாயம்...?”

“அநியாயந்தான்... எப்படியோ ஒரு சிலந்தி வலையில சிக்கிக்கிட்டே.... ஒண்ணு, சிலந்தியே வலையே அறுத்தாத்தான் உண்டு. பொதுவாக, பெரிய பூச்சிங்க சிக்கிக்கிட்டால், சிலந்தியே பயந்துபோய், வலையை அறுத்து அதைத் தப்பிக்க வைக்கும். இதனுடைய தாத்பரியத்தை அப்புறமா பேசிக்கலாம். இப்போ, எனக்கு நேரமாவுது. எங்கேயும் போகாதே... இங்கேயே இரு...”

“ஜீப்பை எடுத்துக்குங்க ஸார். என் ஆட்களையும் கூட்டிக்கிட்டு போங்க ஸார்...”

‘எல் அண்ட் ஒ’ பெருமாள், ஒரு சோகப் புன்னகையோடு, சகாக்களோடு வெளியேறினார். சாமிநாதன், மேஜையை குத்தினான்; சாமியாடுவதுபோல் தலையை ஆட்டினான்.

அந்தப் பகுதி வாசகர்களுக்கு ஒரு வார்த்தை...

‘தயவுசெய்து, இப்போது மட்டும் அந்தக் காவல் நி த்திற்குப் போகாதிர்கள். உங்களை கொன்றே போட்டுவிடுவான்.”

ஆனந்த விகடன் - 2000