பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசியர்கள்

123


தொங்கிய தூக்குப் பையிலிருந்து ஒரு வார இதழையும் எடுக்கிறான். வழக்கம் போல் நாளுக்குள் வாரத்தைப் புதைத்து காலமாற்றம் செய்யப்போனவன், அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி முத்துக்குமாரிடம் அதை நீட்டுகிறான். வர்ணிப்போடு கொடுக்கிறான்.

‘உங்களுக்குத் தான்னே இந்த பேப்பர். வாங்கிக்கங்க அண்ணே. எனக்கு ஒரு கைவீச்சு மிச்சம்.’

முத்துக்குமார் வாங்காமல் நின்றபோது, சித்தப்பா வாங்கிக் கொள்கிறார். ஒற்றை எலும்பால் ஆனது போன்ற அந்தச் சிறுவன், அவரை நன்றியோடு பார்க்கிறான். சித்தப்பா, அவனிடம் தனது சந்தேகத்தை கேட்கிறார்.

‘தம்பி... நீ அப்போ இவன சைக்கிள்ல மோதினியே அவன்தானே.”

ஆமாம் சார். அப்ப பால் பையன், இப்போ பேப்பர் பையன், இன்னும் இரண்டு மணி நேரத்துல ஸ்கூல் பையன். சாயங்காலமா சின்ன பிள்ளைங்களுக்கு டியூசன் வாத்தியார்

அப்போ நீ பள்ளிக்கூடத்துல படிக்கிறியா?

‘ஏன் இப்படி நம்பாதது மாதிரி கேட்கறீங்க. நான் படிக்கக்கூடாதா?

அப்படிச் சொல்வேனா? படிக்கிற பையன் இப்படி உடம்ப வருத்தணுமா? அப்பா, அம்மா உன்னை தெருவுல விட்டுட்டு என்ன செய்றாங்க?

‘என்னசார் செய்யுறது? அப்பன் குடிகாரன். அம்மா நோயாளி. எங்க அக்காவ கூட்டிக்கிட்டு ஓடிப்போன புறம்போக்கு ஒரு வருசத்துக்கு முன்னாடியே அவள, கை விட்டுட்டான். காதல் கசந்துட்டாம். எப்படியோ எங்க அக்காவ வேற கல்யாணம் செய்றதுக்கு சம்மதிக்க வச்சுட்டேன். அதற்கு கொஞ்சம் பைசா தேவப்படுது.’

அப்போ அக்கா கல்யாணத்துக்கு பிறகு இப்படி உடம்ப வருத்திக்கிறத நிறுத்திடுவியா