பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலவரப் போதை

133


வந்தாரு. அப்புறம் கர்ப்பிணி மனைவியை, காலை ஒடித்து

ஆஸ்பத்திரிக்கு அனுப்பினாரு. அந்தம்மா, ஆஸ்பத்திரியில இருந்தே

நிரந்தரமா பிறந்த வீட்டுக்கு போயிட்டாள்.”

“இப்போ இவனை யார் பார்த்துகிறது...?”

“இத்தனைக்குப் பிறகும் யார் பார்ப்பாங்க? பெற்ற தாய் மட்டுந்தான் பார்க்கமுடியும். அந்தம்மா ஒரு ஐடியல் மதர். விவசாயக்கூலி. காலையில இவரைக் கட்டிப்போட்டுட்டு, மாலையில வந்து அவிழ்த்து விடுவாள். அம்மாவைப் பார்த்ததும், இவரும் அடங்கிப் போவார். ஓ மை காட். அதோ பாருங்க...”

பட்டதாரி இளைஞன் சுட்டிக்காட்டிய அந்த ஆடுதளத்தில், பன்னீர் தில்லானாவுக்கு வந்து விட்டான். ஒரே சமயத்தில் வாய் திட்டுவாங்கம் வாசிக்க, அவன் கைகள் ஒன்றோடொன்று மோத, விரல்கள் ஒன்றை ஒன்று கிள்ள, பற்கள் ஒன்றை ஒன்று கடிக்க, உதடுகள் ஒன்றை ஒன்று பிதுக்க, கால்கள் ஒன்றை ஒன்று உதைக்க, மோவாய் கழுத்தில் பலவந்தமாய் மோத, நாக்கு, மகிசாசூரவர்த்தினியின் நாக்குபோல் பற்கடிக்கு இடையே வெளிப்பட, கண்களும் இமைகளும் மோதிக்கொள்ள சுழன்றாடினான். அந்த ஆட்டத்தில், இதயம் நுரையீரலோடும், குடல் இரைப்பையோடும், எலும்புகள் நரம்புகளோடும், முதுகுத்தண்டு கழுத்தோடும், சிறுமூளை, பெருமூளையோடும் மோதியிருக்க வேண்டும். ஆனந்தத் தாண்டவம், ஊழிக்கூத்தானது போன்ற சுழற்சி. இதற்கு தாளலயமாய் வாங்கடா வாங்க. சண்டைக்கு வாங்க என்று மாறி மாறி, ராகத்தோடு கத்தினான்.

அந்தக் குழுவின் தலைவரான இ.ஆ.பெ. உக்கம்சிங் குரங்கு கூட்டத்தின் தலைமை குரங்கு தனித்து நிற்பதுபோல் தொடர்ந்து தனித்துவமாய் நின்றபோது -

இப்போது இதர உறுப்பினர்கள், மனிதாபிமான வயப்பட்டு பன்னீரைப் பிடிப்பதற்காக, உடல் குலுங்க ஒடியபோது, பறட்டைத் தலை மூதாட்டி ஒருத்தி, வயிறு எக்க ஓடிவந்தாள். ‘ஏய் நொறுங்குவான். நூறு சில்லியா போறவனே... உன்னைத்