பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

சமுத்திரக் கதைகள்


இருந்தவன்தான். அப்புறம் என்னடான்னா... விநாயகர் சதுர்த்தியில...”

வாயை மறைத்த புதர் மீசையோடு வார்த்தைகளை வடிகட்டிப் பேசுவதுபோல் பேசிய பழைய நாட்டாண்மைக்கு, குழுவினர் குனிந்து காதுகொடுத்தபோது, கூட்டம் ‘அய்யய்யோ... அச்சச்சோ...’ போட்டபடியே, பன்னிரை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது பன்னீர், தனது கோரைப்பல் வாயால் தோள்களைக் கடித்தான். உதடுகளை உலக்கைபோல் குத்தினான். விரல்களை வாய்க்கு கொண்டுவந்து, கரும்பை கடிப்பதுபோல் கடித்தான். அவனைப் பிடிக்கப்போன ஊர்வாசிகளை, சமூகயியல் பாப்பம்மா, ஒண்ணும் ஆயிடாது. சும்மா நில்லுங்க..” என்று இரு கரங்களையும் நீட்டித் தடுத்தாள். பழைய நாட்டாண்மையின் வாயருகே காதுகள் படும்படி குதிகாலால் நின்று, விநாயகர் சதுர்த்தியில... சொல்லுங்க... என்று அவள் கிசுகிசுப்பாய் கேட்டபோது, அதைச் சொல்லக்கூடாது என்பதுபோல், ஒரு வேலையில்லா பட்டதாரியும் பட்டைதாரியுமான இளைஞன், விவரக் களத்தை மாற்றினான்.

“இந்த பன்னிரு ஊர்ச்சண்டை, சாதிச்சண்டை இல்லாமல், தெருச்சண்டையிலும் வீராதி வீரர். இவரோட வடக்குத்தெரு கன்னிமாடன் கூட்டத்துக்கும், தெக்குத்தெரு சாயச்சாமி கூட்டத்துக்கும் கல்லெறிச் சண்டை நடந்தப்போ, இவர்தான் நாலுபேரு பல்லை உடைச்சு அதிக கோல் போட்டார். அப்புறம், இவரோட அண்ணன் தம்பிகளுக்கும், இவரோட பெரியப்பா பிள்ளைகளுக்கும் வரப்புத் தகராறு. ரெண்டு பேரை சாய்ச்சார். அப்புறம், இவர் வீட்டுக்குள்ளேயே சண்டை. இவரு பல சண்டையில ஈடுபட்டதால, போலீஸ்காரங்க இவங்க குடும்பம் முழுசையும் பிடித்துட்டுப் போனாங்க. இதனால, அண்ணன் தம்பிகளுக்கு இவர் மேல கோபம். கூடவே குடும்பத்துக்குத் தெரியாம, தன்னோட பங்கு நிலத்தை ஈரத்துணிக்கு வித்துட்டாரு. இதை தெரிஞ்ச அண்ணன் தம்பிங்க, இவரைத் தட்டிக் கேட்டாங்க. தட்டிக் கேட்டவங்களத் தலையில தட்டிட்டு, ஈரத்துணியோட நிலமான இந்த இடத்துல, மண்சுவர் எழுப்பி, மனைவியோட