பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்குடி

149


பின்வாங்குவதும், ஈட்டிக்காரர்கள் பின்வாங்கும்போது முன்வாங்குவதுமாய் அலைமோதுகிறார்கள். தொலைதுார குடிசைப் பகுதியில் இவர்களின் நெருக்கமான உறவினர்கள் குய்யோ, முறையோ என்று கூக்குரலிடுகிறார்கள். மாரடிக்கிறார்கள். கிழே குனிந்து மண்ணள்ளி வாயில் போட்டுக் கொள்கிறார்கள்.

ஆறுமுகப்பெருமாள் தலைமையிலான அந்தக் கும்பல், இசக்கி மாடத்தியோடு, பாருக்குட்டியை கடக்கப்போனது. உடனே அடிமைக்காரி, அவன்ளப் பார்த்து தனது கைகளை தலைக்குமேல் துக்குகிறாள். அவள் காலில் விழுவதற்காக முன்பக்கமாக சாய்கிறாள். அதற்குள் முன்பக்கமாய் நின்ற ஒரு ஏவலாளி, தனது ஒரு கால்களை குறுக்காய் நீட்டி, அவள் சரிந்து விடாமல் முட்டுக் கொடுக்கிறான். பின்பக்கமாய், நின்றவன் அவளின் கைகளை முதுகின் இருபக்கமும் வளைத்து பிடித்து வைத்துக் கொள்கிறான்.

பாருக்குட்டி, அந்தக் கும்பலை வழிமறிப்பதுபோல் குறுக்கே நின்று ஆறுமுகப் பெருமாளிடம் கெஞ்சுகிறாள்.

“நான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமனாலும் கொடுக்கேன். இவளை என்கிட்ட விட்டுடுங்க. என் சம்பந்தக்கார தறவாட்டுல இருந்து எனக்கு நாலு, எட்டுன்னு பனிரெண்டு ரூபா வந்திருக்கு. முழுசையும் கொடுத்துடறேன்.”

மாடத்தியை வாங்கிய ஆறுமுகப் பெருமாள் கணக்குப் போட்டுப் பார்த்தார். அவள் ஒரு எருதின் விலைபெறுவாள். அதாவது பதினெட்டு ரூபாய் பெருவாள். அதோடு இவளிடமே விற்பது பார்வதிக்காரரை அவமானப்படுத்தும் காரியமாக கருதப்படும். மண்ணிற்காகவும், மரத்திற்காகவும் மனத்தாங்கல் வரலாம். கேவலம் ஒரு அடிமைக்காக வரலாமா...

ஆறுமுகப் பெருமாள், பேச்சை மாற்றினார்.

‘பணம் கிடக்கட்டும். இவளும் இருக்கட்டும். மொதல்ல பெரிய மனிதரப் பார்த்தா, மார்புத் துணியை எடுக்கணும் என்கிற மரியாதையை தெரிஞ்சுக்கம்மா."