பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மாடசாமியின் ஊர்வலம்

குதிரைப் பந்தயம் நடக்கலாம் என்று உயர்நீதி மன்றம் அளித்தத் திர்ப்பை, எல்லா பத்திரிகைகளும், இரண்டாவது மூன்றாவது பக்கங்களில், நிதானத்துடன் பிரசுரித்திருந்தன. ஆனால் மாடசாமியின் கண்ணில்பட்ட பத்திரிகை மக்கள் பத்திரிகை, ஆகையால் குதிரைப் பந்தயம் நடக்கும் என்று கொட்டை எழுத்தில் பிரசுரித்திருந்தது.

மாடசாமி செய்த ஒரே பாவம் அந்தக் காலத்து திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுத்துக் கூட்டி’ வாசிக்குமளவுக்குப் படித்திருந்ததுதான்.

சாயாக் கடையில் தன்னிடம் ஒன்றுமில்லை என்று காட்டுவது போல், ரிக்ஷாக்காரர் இரண்டு கைகளையும் அகலமாக விரித்து வைத்துக் கொண்டு, அதற்குள் அந்த பத்திரிகையை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். குதிரைப் பந்தயச் செய்தியை, அன்று நடந்த மிகப் பெரிய உலகச் செய்தியாக நினைத்து அவர் படித்தபோது. மாடசாமியும் பத்திரிகைக்குள் தலையை நீட்டி விட்டு, பிறகு நம்மிடம் கழுதைகட இல்லையே. குதிரை ஓடினால் என்ன... சாடினால் என்ன” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே, வெளியே பாரத்தோடு இருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தான்.

சிலநாட்கள் சென்றிருக்கும்.

தமிழக மக்களின் கலாச்சாரத்தையும், தனித் தன்மையையும் காட்டுவதாகக் கூறப்படும் அந்த பத்திரிகை, மாடசாமியை விடுவதாக

-

மாடசாமி, வாடிக்கைக் கடை ஒன்றின் முன்னால், சைக்கிளை நிறுத்திவிட்டு. கேரியரில் கட்டியிருந்த மரப்பெட்டியைத் திறந்து பத்து பாக்கெட் கடலை மிட்டாய்களை கடைக்காரரிடம் நீட்டினார்.